விக்ரம் புரோமோஷனில் இருக்கும் கமல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக களமிறங்கியுள்ளார். அதில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியதுடன் சிவாஜி, எஸ்பிபி உள்ளிட்டோருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், கவிதைகளையும், பாடல்களையும் பாடி அரங்கத்தை குதூகலப்படுத்தியுள்ளார். இந்த புரோமோக்கள் விஜய் டிவியின் டிவிட்டர் மற்றும் யூ டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து புரோமோக்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | நான் 3ஆம் க்ளாஸு நீ 8ஆம் க்ளாஸு - கமலை பார்த்து ஆச்சரியப்பட்ட சிவாஜி
போட்டியாளர்களில் ஒருவர் விருமாண்டி படத்தில் இடம்பெறும் ‘உன்ன விட’ பாடலை பாடும்போது அசந்துபோகும் கமல், அரங்கத்தில் இருந்தவர்களின் விருப்பதுக்கு ஏற்ப அந்த பாடலையும் பாடிக்காட்டினார். பின்னர், விக்ரம் படத்தில் பாடியிருக்கும் ‘பத்தல பத்தல’ பாடலை பாடிய கமல், தொகுப்பாளினி பிரியங்கா பாடிய ‘Who is the Hero' பாடலை கேட்டு உற்சாகமானார். தனக்கு தெரிந்த ஒரே ஒரு பாடல் இந்த பாடல் மட்டுமே என்பதால், உங்கள் முன் பாட ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கும் பிரியங்கா, அந்தப் பாடலை சூப்பராக பாடி சங்கர் மகாதேவன் மற்றும் கமலின் கைத்தட்டல்களும் பாராட்டையும் பெற்றார்.
பின்னர், தான் எழுதிய கவிதை ஒன்றை உணர்ச்சி பெருக்கோடு பாடும் கமல், மலையாள மொழியில் எழுதப்பட்ட கம்யூனிச கவிதை ஒன்றையும் எடுத்துரைத்தார். அவரின் இந்த கவிதை பாடல்களைக் கண்டு ஏற்கனவே போட்டியாளர்களாக இருக்கும் சிறுவர்கள் மற்றும் நடுவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வியப்பின் உச்சத்துக்கே செல்கின்றனர். கமலின் வருகையையொட்டி எஸ்பிபியின் மகன் சரண் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
நிகழ்ச்சி முழுவதும் நிமிடத்துக்கு நிமிடம் பரவசம், வியப்பு என என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகும் விக்ரம் படத்தின் புரோமோஷனுக்காக தான் இந்த ரியாலிட்டி ஷோவில் கமல் கலந்து கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | விக்ரம் படத்திற்கு இயக்குனர் லோகேஷ் வாங்கிய சம்பளம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR