நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று இரவு வெளியான படம் ‘ஜெய்பீம்’. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா (Actor Suriya) இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார்.
தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் (Jai Bhim) படத்தில் பிரகாஷ் ராஜ், ரெஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்பட்டத்தை சூர்யாவின் 2டி பிரொடெக்சன்ஸ் தயாரித்து இருக்கிறது.
ALSO READ | 'ஜெய் பீம்' படத்திற்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வர்!
ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று இந்த படத்தை பார்த்து இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் பல திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் இந்த படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ‘ஜெய்பீம்’ படம் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது.,
ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2021
ALSO READ | பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR