இயக்குநர் பா. இரஞ்சித் ' நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (பிப். 12) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்தார்.
பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். 'நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,"உயிரே உறவே தமிழே... இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.
We are very excited to welcome you all for the grand inauguration of @NeelamBooks- a Cultural Space for all!
Inauguration by: Ulaganayagan Dr. Kamal Haasan @ikamalhaasan
Date: 12/2/23, 11.30am @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @iraianbu17 @ANITHAera pic.twitter.com/7fkrMgTuSk— pa.ranjith (@beemji) February 11, 2023
பா. ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களிலெல்லாம் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாத போதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாச்சாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல்.
மேலும் படிக்க | தங்கத்தில் மின்னும் கைராவின் அத்வானியின் தாலி... எத்தனை கோடி தெரியுமா?
ஆளும் கட்சி, ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன். நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும்பட்சத்தில் ஜனநாயகம் நீடுழி வாழும். தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன்தான் என்று நினைக்கும்பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்
அரசியலில் என்னுடைய மிக முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை; அதை நான் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்போது நான் அதனை தரமான வார்த்தைகளில் பக்குவமாக சொல்கிறேன். ஆனால் கருத்து மாறவே இல்லை.
#JustIn | சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனையகத்தை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பு!#SunNews | #neelambooks | Kamal Haasan | #PaRanjith pic.twitter.com/5GASA0BvWM
— suriyahassan (@SuriyaHaasanMNM) February 12, 2023
சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் கொடூரமான ஆயுதம் சாதி. இது எனக்கு மூன்று தலைமுறைகளை முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது; ஆனால் இன்றும் நடந்த பாடில்லை; எழுத்து (Spelling) வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம். ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான்”
என்று பேசினார்.
மேலும் படிக்க | மீண்டும் விக்ரமனை சீண்டிய பிக்பாஸ் அசீம்! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ