சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய படம், தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இயக்கிய இப்படத்தில் அடா ஷர்மா, தேவதர்ஷினி, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டது. இந்த படத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தி கேரளா ஸ்டோரி படம் குறித்த தனது கருத்தினை கூறியுள்ளார்.
கமல்ஹாசன்:
அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IFFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகிறது. இதில், பாலிவுட்நட்சத்திரங்களான சல்மான் கான், விக்கி கெளஷல், ரகுல் ப்ரீத் சிங், ஜெனிலியா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கமல், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
மேலும் படிக்க | பைக் ஓட்டி பழகும் சின்னத்திரை நயன்தாரா..வாணி போஜனின் சாகச பயண க்ளிக்ஸ்!
“இதெல்லாம் உண்மை கதையா?”
தி கேரளா ஸ்டோரி படம் குறித்து பேசிய கமல், அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார். அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
“அப்படத்தை எதிர்க்கிறேன்..”
தி கேரளா ஸ்டோரி படத்தை மததுவேஷ பிரச்சாரம் செய்யும் படம் என கமல் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உண்மை இருக்க வேண்டும் ஆனால் அந்த படத்தில் அது இல்லை” எனவும் கமல் கூறியுள்ளார். இவரது கருத்து நேற்று முதல் வைரலாகி வருகிறது.
கமல் ஹாசனுக்கு கைதட்டல்..
‘உலகநாயகன்’ என அழைக்கப்படும் கமல்ஹாசனிற்கு IFFA விருது வழங்கும் விழாவில் சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். கமலிற்கு விருது வழங்கும் போது அந்த விழாவில் பங்கேற்றிருந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். இந்த விருது கிடைத்ததற்கு நன்றி தெரிவித்த கமல், தான் மூன்றரை வயதில் இருந்து சினிமாவில் இருப்பதாகவும் தன்னை இத்தனை நாளாக ஆதரவு கொடுத்து வரும அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார். நடிகரும் அரசியல் பிரமுகருமான கமல்ஹாசன், சினிமாவைத்தாண்டி பல்வேறு சமூக ரீதியான விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் பாலியல் கொடுமை தொடர்பாக டெல்லியில் நடக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
100கோடி வசூல்!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒரு சிலர் அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி முதல் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வரை பலர் அந்த லிஸ்டிற்குள் அடங்குவர். மேற்கு வங்காளத்தில் இப்படம் சமீபத்தில்தான் வெளியானது. ரிலீஸான முதல் நாளே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் தி கேரளா ஸ்டோரி காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் இப்படம் 100கோடி வசூலை தாண்டி 200 கோடியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | பாென்னியின் செல்வன் 2 ஓடிடி ரிலீஸ்…எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ