குழந்தையின் முகத்தை காட்டிய காஜல் - ரசிகர்கள் வாழ்த்து

காஜல் அகர்வால் தனது மகனின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 17, 2022, 09:31 PM IST
  • காஜல் அகர்வால் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர்
  • அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தான்
  • தற்போது அவனது புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்
குழந்தையின் முகத்தை காட்டிய காஜல் - ரசிகர்கள் வாழ்த்து title=

காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.  இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு  அக்டோபர் 30ஆம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வருட புத்தாண்டு தினத்தில்தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார், இவருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தான். அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக்கற்றுக்கொண்டேன். 

நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நினைக்கவே இல்லை” என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் தனது மகனின் முகத்தை பொதுவெளிக்கு காட்டவில்லை.

இந்நிலையில், தற்போது குழந்தையின் முகம் முழுவதுமாக தெரியும்படியான ஃபோட்டோவுடன் வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் காஜலுடன் அவரது கணவரும் இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மிக்கு பிரபலங்கள் கூவுகிறார்கள் - மூத்த நடிகர் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News