நாளை முதல் திரையில் ‘ஜூலி 2’ ராய் லட்சுமி!!

‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. 

Last Updated : Nov 23, 2017, 06:24 PM IST
நாளை முதல் திரையில் ‘ஜூலி 2’  ராய் லட்சுமி!! title=

‘ஜூலி 2’ 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் ஷிவதாசன் இயக்கி உள்ளார்.

ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்தவர் ராய் லட்சுமி. இவருக்கு இது 50_வது படம். இப்படத்தில் ராய் லட்சுமி படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில், வரும் 24-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது ராய் லட்சுமி படத்தின் ப்ரோமொஷனுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

 

Trending News