எல்லாரையும் ஓடவிட வருகிறார் ஜூலி! மீண்டும் பிக் பாஸில்!

பிக்பாஸ்-1 மூலம் பிரபலமான ஜூலி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 06:13 PM IST
  • கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை சிறியவர், இளைஞர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.
  • ஜூலி 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
எல்லாரையும் ஓடவிட வருகிறார் ஜூலி! மீண்டும் பிக் பாஸில்!  title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் (Big Boss).  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் அதிகளவில் பரிட்சயமில்லாத அல்லது பிரபலமான 14-16 நபர்களை தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதுமின்றி ஒரு வீட்டிற்குள் 100-106 நாட்கள் வைத்து அவர்களின் உண்மையான சுயரூபத்தை உலகிற்கு வெளிக்காட்டுவதே இந்நிகழ்ச்சி.  இந்நிகழ்ச்சியை சிறியவர், இளைஞர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.  

julie

ALSO READ | Bigboss Ultimate: மீண்டும் களம்காணும் தாமரை, வனிதா, பரணி? 16 பேர் லிஸ்ட் இதோ

முதல்முறையாக இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.  இதில் 15 பேர் முதன்மை போட்டியாளர்களாக கலந்து கொண்டனர், இடையில் 4 பேர் போட்டியாளர்களாகவும் இதில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் வின்னராக ஆரவ் என்பவரும், ரன்னராக ஸ்நேகனும் வெற்றி பெற்றனர்.  இந்த போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றவர் தான் ஜூலி.  இவர் 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். 

julie

பிக்பாஸில் (Big Boss)இவரது என்ட்ரியை தமிழ் ரசிகர்கள் பலரும் கொண்டாடிய நிலையில், வீட்டிற்குள் இவரது செய்கைகள் பலரையும் முகம் சுளிக்க செய்தது.  ஓவியாக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் இவரை கொண்டாடி தீர்த்த பலரும் இவரை பற்றி வகைவகையாக வசைபாட தொடங்கினர்.  செவிலியராக பணியாற்றிய இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் இந்நிகழ்ச்சிக்கு வந்து அவரது பெயரை கெடுத்து கொண்டார்.  மக்களின் ஆதரவால் உள்ளே இருந்தவர், மக்களின் அதிருப்தி காரணமாக  எலிமினேட் செய்யப்பட்டார்.  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் இவருக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் இவர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். 

 

சமீபத்தில் பிக் பாஸ்-5 முடிந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது.  இதில் முதல் 5 சீசன்களிலும் உள்ள போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.  இதில் பலரும் எதிர்பார்த்தது ஜூலி, தற்போது இவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவது உறுதியாகியுள்ளது.  இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது, அதில் ஜூலி கெத்தாக 'ஓட்டுனதும் போதும், ஒழிஞ்சதும் போதும் , இனி எல்லாரையும் ஓட விடறேன், இனி எல்லாருக்கும் குறும்படம் போட வைக்கிறேன்' என்று கூறுவதோடு இந்த வீடியோ நிறைவடைகிறது.

ALSO READ | Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட்..இவர்தான் முதல் போட்டியாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News