‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Japan Twitter Review: ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜப்பான் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 11:22 AM IST
  • கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜப்பான்.
  • இதை ராஜூ முருகன் இயக்கியுள்ளார்.
  • ஜப்பான் படம் எப்படியிருக்கு? இதோ ட்விட்டர் விமர்சனம்.
‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ! title=

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் கார்த்தி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் ஜப்பான் (Japan Movie). கொள்ளையனை மெயின் கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சில ரசிகர்கள் விமர்சனங்களை (Japan Twitter Review) கொடுத்து வருகின்றனர். 

கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் முதல் காட்சி, தமிழகத்தில் 9 மணிக்கும் ஒரு சில இடங்களில் 7 மற்றும் 8:30 மணிக்கும் ஆரம்பித்துள்ளன. தமிகழத்தை தவிர, பிற மாநிலங்களில் இப்படத்தின் முதல் காட்சி 6 மற்றும் 7 மணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்களை விட சீக்கிரமாகவே விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 

ஜப்பான் திரைப்படம்:

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜப்பான். கார்த்தி (Karthi) ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் அனு இமானுவேல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். இந்த தீபாவளிக்கு படம் ரிலீஸாகியுள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு என்ன? இங்கே பார்ப்போம்.

“முதல் பாதி ஓகே..இரண்டாம் பாதி..”

ஜப்பான் படத்தை பார்த்த ஒரு ரசிகர், படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும் ஆங்காங்கே காமெடி டைலாக்குகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடைவேளை காட்சி சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், படத்தில் எமோஷனல் கனெட்க் இல்லை என்றும் ஆக்‌ஷன் காட்சிகல் சுமாராக உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். படத்தில் வெறுப்பாகும் அளவிற்கு எந்த காட்சிகள் அல்லது பாடல்களும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், விறுவிறுப்பான திரைக்கதையால் படம் தேருவதாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

ஒளிப்பதிவு:

ஜப்பான் படத்தின் ஒளிப்பதிவிற்கும் கேமரா வேலைக்கும் ஒரு ரசிகர் பாஸ் மார்க் போட்டு ட்விட்டரில் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். 

ஜப்பான் படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கார்த்திக்கு பாராட்டு மழை..

ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது படமாகும். இப்படத்தில் முழுக்க முழுக்க கார்த்தி மட்டுமே ஸ்கோர் செய்வதாக ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

படத்தை முழுமையாக ரசித்ததாகவும் கார்த்தியின் கதாப்பாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தில் சண்டை காட்சிகளையும் பின்னணி இசையையும் மிகவும் ரசித்ததாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 

இன்னொரு ரசிகரும் கார்த்தியின் கதாப்பாத்திரம் மற்றும் படத்தின் ஒளிப்பதிவினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். 

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், பின்னணி இசை என படக்குழுவின் அனைத்து வேலைகளயும் இந்த ரசிகர் பாராட்டியுள்ளார். 

ஜப்பான் படத்தின் கதை:

ஜப்பான் படத்தில் கார்த்தியின் கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் முன்னரே வெளியாகி இருந்தன. தமிழக போலீஸாரை கதிகலங்க விட்ட கொள்ளியர்களுள் ஒருவர், திருவாரூர் மூருகன். இவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறத். இவர், 2019ஆம் ஆண்டு பிரபல நகைக்கடை ஒன்றில் பெரிய அளவிலான பணத்தை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தையும் திருவாரூர் முருகனின் கதாப்பாத்திரத்தையும் அடிபடையாக கொண்டுதான் ஜப்பான் படத்தின் கதை எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப் போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News