முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான #ChiyaanVikram58 திரைப்படத்தில் இர்பான் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் #ChiyaanVikram58 திரைப்படத்தில் இர்பான் பிரவேசம் குறித்து படக்குழுவினர் பதிவிடுகையில்., "புதியதொரு தோற்றத்தில் சியான் விக்ரமின் 58-வது திரைப்படத்தில் இர்பான் பதானை அறிமுகம் செய்வதில் பெருமை படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
New venture,new challenge looking forward to it
@AjayGnanamuthu @iamarunviswa @7screenstudio
@arrahman
@Lalit_SevenScr #ChiyaanVikram58 @sooriaruna
@proyuvraaj @LokeshJey@VishalSaroee pic.twitter.com/yZ99OZyJrl— Irfan Pathan (@IrfanPathan) October 14, 2019
7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக கடாரம் கொண்டாம் திரைப்படம் உருவானது. அதேப்போல் இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2012-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இர்பான் பதான் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியன் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியாவுக்காக 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 173 விக்கெட்டுகளையும், ஐந்து அரைசதங்களுடன் 1,544 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., 24 டி20 போட்டிகளிலும் விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.