சுதந்திர தினம் 2023 தென்னிந்திய படங்கள்: ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து ஆண்டுதோறும் இந்நாளில் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் தேசபக்தியை உணர்த்தும் விதமாக வெளிவந்த படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் தேசபக்தி பற்றிய தமிழ் திரைப்படங்களை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம் .
மேலும் படிக்க | என்ட்ரி கொடுக்கும் சண்முகத்தின் அம்மா.. சூடு பிடிக்கும் அண்ணா சீரியல்
ஆர்.ஆர்.ஆர்
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR சுதந்திரத்திற்கு முந்தைய கால பயணத்தை காட்டுகிறது. சுதந்திரத்திற்கு முன் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுடன் எப்படிப் போரிட்டார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்த படம் உண்மையில் அதை காட்டுகிறது. இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இந்த படம் அமைந்தது. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராமராஜுவாக நடித்துள்ளனர். இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
சீதா ராமம்
சீதா ராமனை சேர்த்ததால், காதல் படம் ஏன் லிஸ்டில் சேர்ந்தது என தவறாக நினைக்க வேண்டாம். காதலுக்கும் தேசத்துக்கும் இடையே நடக்கும் போர் எப்போதும் கடினமானது, அதைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. இது ஒரு காதல் கதையாக இருந்தாலும், ராமின் தேசத்தின் மீதுள்ள அன்பையும் அவரது கடமையையும் இந்த படம் எடுத்துக்காட்டுகிறது.
லெப்டினன்ட் ராம் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். ஹனு ராகவபுடி இயக்கிய திரைப்படம், காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரான ராமின் (துல்கர் சல்மான்) கதையைச் சொல்கிறது, அவர் சீதா மஹாலக்ஷ்மிடம் இருந்து ரகசிய காதல் கடிதத்தைப் பெறுகிறார். இதன் அடிப்படையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
மதராசப்பட்டினம்
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படம் தான் ‘மதராசப்பட்டினம்’. பிரிட்டிஷ் பெண்ணான எமி ஜாக்சன் தமிழ்நாட்டில் சலவைத் தொழில் செய்யும் ஆர்யா இடையேயான காதல் தான் படத்தின் மையக்கரு. சுதந்திரப் போராட்டத்தையும், சுதந்திரத்திற்குப் பிறகு தம்பதியருக்கு என்ன நடக்கிறது என்பதையும் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் ஏ.எல்.விஜய்.
ஆகஸ்ட் 16 1947
பிரிட்டிஷ் ஆட்சியாளரின் பிடியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற்ற பிறகும் ‘செங்காடு’ எனும் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு விடுதலை கிடைத்த செய்தியே அறியாத வகையில் சூழ்ச்சிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா என்பதே இந்த படத்தின் கதை. இயக்குநர் பொன்குமார் படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார். நாயகன் கௌதம் கார்த்திக், அவரது நண்பராக வரும் புகழ், பிரிட்டிஷ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் ஆஷ்டன், அவரது மகனாக நடித்துள்ள ஜேசன் ஷா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் தங்கள் நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தனர்.
ரோஜா
காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் ரோஜா. பயங்கரவாதிகளிடம் சிக்கிய தனது கணவனை மீட்டெடுக்க மனைவி நடத்தும் காதல் போராட்டம் தான் இந்த ரோஜா. இப்படத்தின் மூலம் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
இந்தியன்
சுதந்திரப் போராட்டத்தை சித்தரித்து எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ‘இந்தியன்’ படமும் ஒன்று. இதில் சேனாபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரராக கமல்ஹாசன் நடித்தார். பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய, ‘இந்தியன்’, இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வேதனையைப் பற்றி பேசும் படமாக வெளிவந்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தற்போது இந்தியன் 2 படமும் தயாராகி வருகிறது.
ஜெய்ஹிந்த்
சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பப்படும் திரைப்படம் என்றால் அது அர்ஜுன் இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் தான். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மிகவும் நேர்த்தியாக படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் அர்ஜுன். இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஞ்சிதா நடித்திருந்தார்.
மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. சுபாஷால் நடந்த மேஜிக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ