நான் இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன் : ரஷ்மிகா ஓபன் டாக்

திருமணம் எப்போது என்பது குறித்து கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 08:01 PM IST
  • Rashmika கியூட் செயல்களை கண்டு ரசிகர்கள் பலரும் 'Expression Queen' என்று போற்றுகின்றனர்.
  • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிப்பதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்தது.
நான் இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன் : ரஷ்மிகா ஓபன் டாக் title=

திரையுலகில் குறுகிய காலத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவரது கியூட் செயல்களை கண்டு ரசிகர்கள் பலரும் 'Expression Queen' என்று போற்றுகின்றனர்.  சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  இவரை பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி இணையத்தில் அதிக அளவில் உலா வருகின்றன. 

மேலும் படிக்க | 'ஸ்ரீவள்ளி' பாடலால் மீண்டும் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்!

முன்னர் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிப்பதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்தது.  இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது திருமணம் மற்றும் காதல் உறவு குறித்த கேட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.  காதல் குறித்து அவரிடம் கேட்டதற்கு "என்னைப் பொறுத்தவரை, காதலர்கள் ஒருவருக்கொருவர் சமமான மரியாதை மற்றும் நேரத்தை அளிக்க வேண்டும், அவர்களுடன் இருக்கும்போது நமக்கு பாதுகாப்பான எண்ணம் தோன்ற வேண்டும்.  காதல் இரண்டு பேரிடமும் ஒரே அளவாக செயல்பட வேண்டும், ஒருவரிடம் காதல் உணர்வு மிகுந்தும், ஒருவரிடம் குறைவாகவும் இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

திருமணத்தைப் பற்றி பேசுகையில், "எனக்கு இதைப் பற்றி என்ன நினைப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் திருமணத்தை பற்றி பேசுவதற்கான போதிய வயது எனக்கு இல்லை, அதனால் நான் அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. அதுவே ஒருவருடன் வாழ்வது உங்களுக்கு வசதியாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

தற்போது ராஷ்மிகா இரண்டு பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'மிஷன் மஜ்னு' படத்திலும், அமிதாப் பச்சனுடன் 'குட்பை' படத்திலும் நடித்து வருகிறார்.  சமீபத்தில் வெளியான புஷ்பா: தி ரைஸின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க | யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த 'ஊ சொல்றியா மாமா' பாடல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News