ஜோதிகா - சூர்யா விவாகரது செய்வது உண்மையா? இதோ லேடஸ்ட் அப்டேட்

ஜோதிகா மற்றும் சூர்யா குறித்த செய்தி ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இவர்கள் இருவரும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 30, 2024, 10:36 AM IST
  • ஜோதிகா சூர்யாவுடன் பின்லாந்து விடுமுறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
  • இதன் மூலம் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஜோதிகா - சூர்யா விவாகரது செய்வது உண்மையா? இதோ லேடஸ்ட் அப்டேட் title=

சூர்யா - ஜோதிகா விவாகரத்து விவகாரம்: தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா - ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், சமூக அக்கறையுள்ள கதாப்பாத்திரங்களில் மட்டுமே தோன்றினார். அண்மையில்,ஜோதிகா மம்மூட்டி ஜோடி போட்டு, காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இப்படம், அரசியலில் நுழைய ஆசைப்படும் கணவனை விவகாரத்து செய்யும் பெண்ணாக ஜோதிகா ஓர் முக்கியமான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா (Suriya - Jyothika) அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். மறுபுறம் நடிகர் சூர்யா சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும். இதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப்போற்று’ படத்தை இயக்கியவர், சுதா கொங்கரா. இவர், சூர்யாவின் 43வது படத்தை இயக்க உள்ளார். 

மேலும் படிக்க | Lal Salam: லால் சலாம் - வெடித்தது சர்ச்சை! தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்றவர் நாயகியா? கொளுத்திய மாறன்!

இந்நிலையில் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் சூர்யா ஜோதிகாவைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது, இந்த செய்திகள் வெளியான முதல் அவர்களது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனெனில், தற்போது இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக பிரிந்துவிட்டதாகம் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகளுக்காக கெரியரில் இருந்து பிரேக் எடுத்த ஜோதிகா அவர்கள் வளர்ந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். இந்நிலையில் அண்மையில் மகன், மகளை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. சூர்யாவோ சென்னையில் தான் இருக்கிறார். படங்களில் நடிப்பது தொடர்பாக சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து செய்ய முடிவு செய்து தான் பிள்ளைகளுடன் மும்பைக்கு சென்றுவிட்டார் ஜோதிகா என பேச்சு கிளம்பியது. 

இந்நிலையில் அந்த விவாகரத்து தகவல் குறித்து பேசியிருக்கிறார் ஜோதிகா. அவர் கூறியிருப்பதாவது, நான் இந்தி படங்களில் பிசியாகி இருப்பதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும் என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். நன்றாக படித்து வருகிறார்கள் என்றார். தான் மும்பையிலும், பிள்ளைகள் சென்னையிலும் இருந்தால் அவர்களின் படிப்புக்கு சரிபட்டு வராது என்று அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் ஜோதிகா. தன் பட கமிட்மென்ட்டுகள் எல்லாம் முடிந்ததும் பிள்ளைகளுடன் சென்னைக்கு திரும்பிவிடுவாராம்என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் அங்கிருந்து எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

மேலும் படிக்க | Ethirneechal Serial: ‘எதிர்நீச்சல்’ ஆதி குணசேகரன்: மாரிமுத்துவை விட அதிக சம்பளம் வாங்கும் வேல ராமமூர்த்தி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News