விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

Last Updated : May 29, 2019, 06:37 PM IST
விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ! title=

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி - அருண்குமார் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இருவரும் ஏற்கனவே இறைவி படத்தில் சேர்ந்து நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 

இந்த படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

Trending News