Harry Potter கதாநாயகி நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய்க்கு பலி

பிரிட்டனை சேர்ந்த நடிகையும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான “ஸ்கைஃபால்” திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஹெலன் மெக்ரோரி. அவர் இன்று புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2021, 11:14 AM IST
  • நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய்க்கு பலி
  • ஹாரிபாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை
  • ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திலும் நடித்தவர் நடிகை ஹெலன்
 Harry Potter கதாநாயகி நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய்க்கு பலி title=

பிரிட்டனை சேர்ந்த நடிகையும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான “ஸ்கைஃபால்” திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஹெலன் மெக்ரோரி. அவர் இன்று புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார்.

இன்று காலை 4.45 மணிக்கு தமிழ் திரையுலகம் விவேக் என்னும் சிறந்த கலைஞனை இழந்தது என்றால், நடிகை ஹெலன் மெக்ரோரியின் இழப்பு உலக திரைக்கு மிகப் பெரிய இழப்பு.

52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹெலன் மெரிக்குரி நேற்று தனது வீட்டில் உயிரிழந்ததாக அவரது கணவர் தெரிவித்தார். மனையின் மரணச் செய்தியை ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்.. 

பல பிரபல கதாபாத்திரங்களில் நடித்து உலகப் பிரபலமானவர் நடிகை ஹெலன் மெக்ரோரி. உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்திலும் நடித்தவர் ஹெலன். ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹெலன் மெக்ரோரி இறந்த அதிர்ச்சி செய்தி ரசிகர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஜே.கே.ரவுலிங் (JK Rowling), மைக்கேல் ஷீன் (Michael Sheen) உள்ளிட்ட சக நடிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லண்டனின் நேஷனல் தியேட்டரில் கலை இயக்குனர்  "சந்தேகத்திற்கு இடமின்றி இந்த தலைமுறையின் சிறந்த நடிகைகளில் ஒருவர் ஹெலன்" என்று தனது அஞ்சலியை தெரிவித்துக் கொண்டார்.

திரையில் அவர் ஹாரி பாட்டர் படங்களில் நடித்த ஹெலன், நர்சிசா மல்போயாகவும், திரையில் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவியாகவும் நடித்து பரவலான பாராட்டுகளை பெற்றவர் ஹெலன்.

Also Read | Biography: விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News