அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?! பாரதியை ஃபாலோ செய்யும் அஜித்

நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தின் டைட்டில் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Edited by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 8, 2022, 04:04 PM IST
  • நடிகர் அஜித்தின் 61ஆவது படம் ‘வல்லமை’?
  • பாரதியின் கவிதைகளைக் குறிவைக்கும் படக்குழு?
  • படப்பூஜை அன்றே தலைப்பு வெளியீடு?
அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?!  பாரதியை ஃபாலோ செய்யும் அஜித் title=

நேர்கொண்ட பார்வையில் இணைந்த நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் அடங்கிய மூவர் கூட்டணி அப்படத்தைத் தொடர்ந்து வலிமையில் இணைந்தது. வலிமை திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இக்கூட்டணியில் அமையவுள்ள மூன்றாவது படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. 

Ajith kumar

அஜித்தின் 61ஆவது படமாக அமையவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கவுள்ளது. ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளதாகவும், சென்னை மவுண்ட் ரோடு போல ஐதராபாத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோ மற்றும் வில்லன் என அஜித்துக்கு இரண்டுவிதமான கேரக்டர் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், இப்படத்துக்காக அஜித் 25 கிலோ எடை குறைக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் 61ஆவது படமான இப்படத்துக்கு, வல்லமை எனத் தலைப்பு வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு பட பூஜை  தினத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | 'வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

இக்கூட்டணியில் வெளியான முதல் படத்துக்கு  ‘நேர்கொண்ட பார்வை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. வித்யாசமான தலைப்பாக அமைந்த இது- பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நிமிர்ந்த நன்னடை... நேர்கொண்ட பார்வை....” எனும் பாடலின் வரிகளை நினைவுபடுத்தின. அடுத்ததாக இக்கூட்டணியில் உருவான வலிமை எனும் படத்தலைப்பும், “வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்” என்ற பாரதியின் பாடலை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. 

Ajith kumar

தற்போது கூறப்படும் வல்லமை எனும் தலைப்பும், “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” எனும் பாரதியாரின் புகழ்பெற்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்தத் தலைப்பெல்லாம் பாரதியின் பாடல்களைப் பின்பற்றி வைக்கப்பட்டவையா அல்லது யதார்த்தமாக அமைந்தவையா எனும் விஷயமெல்லாம் படக்குழுவுக்கே வெளிச்சம்!

மேலும் படிக்க | வலிமை படம் காப்பியா?! இணையத்தில் பரவும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News