எலோன் மஸ்கின் புதிய காதலி ஆஸ்திரேலிய நடிகை! ஈர்க்கும் அழகுப் பதுமை

புத்திசாலித்தனத்தால் 27 வயது நடிகையை கவர்ந்து காதலனான 50 வயது எலன் மஸ்கின் புதிய காதல் அத்தியாயம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 09:26 PM IST
  • இரண்டு மாதங்களாக டேட்டிங்
  • 50 வயது உலக பணக்காரரின் 27 வயது காதலி
  • 27 வயதான நடிகை நடாஷா பாசெட்
எலோன் மஸ்கின் புதிய காதலி ஆஸ்திரேலிய நடிகை! ஈர்க்கும் அழகுப் பதுமை title=

50 வயது உலக பணக்காரரின் 27 வயது காதலி. ஆஸ்திரேலிய நடிகையை எலன் மஸ்க் கவர்ந்ததற்கு காரணம், தனது காதலரின் புத்திசாலித்தனத்தால் எலன் மஸ்கின் காதல்வலையில் விழுந்ததாக நடிகை நடாஷா பாசெட் கூறுகிறார். 

எலன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு $233 பில்லியன், ஆனால், அவரது புத்தியின் மதிப்பு? காதல்...காதல்... காதல் என்கிறார் மஸ்கின் புதிய காதலி.

மஸ்கின் கடந்தகால உறவுகள்
பாடகி க்ரைம்சுடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த  மஸ்க், செப்டம்பர் 2021 இல் பிரிந்தார். க்ரைம்சுக்குக்ம் மஸ்குக்கும் பிறந்த மகனின் பெயர்  X Æ A-Xii i.  

கிரிம்ஸுடன் எலோன் மஸ்க்

elon-muskவணிக அதிபருக்கு அவரது முதல் மனைவி, எழுத்தாளர் ஜஸ்டின் மஸ்க் உடன் ஐந்து மகன்கள் உள்ளனர், மேலும் பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலேயை இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தார் எலோன் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் ஜெட் விமானத்தில் இருந்து வெளியேறியபோது, அவருடன் ஒரு பெண் இருந்தார்.

மேலும் படிக்க | எலோன் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா

நீண்ட கறுப்பு ட்ரெஞ்ச் கோட் மற்றும் சன்கிளாஸ் அணிந்து அந்த பெண் தனது அடையாளத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, அந்தப் பெண் ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பாசெட் என தெரியவந்துள்ளது.  

நடாஷா பாசெட் யார்?

27 வயதான ஆஸ்திரேலிய நடிகை சிட்னியில் வளர்ந்தவர், தனது 14வது வயதில் இளைஞர்களுக்கான ஆஸ்திரேலியன் தியேட்டரில் ரோமியோ ஜூலியட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடாஷா, நாடகப் பள்ளியில் சேர 2019 வயதில் நியூயார்க்கிற்குச் சென்றார். 

இளம் நடிகை நடாஷா, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். 

நடிகை இப்போது மறைந்த பாடகர் எல்விஸ் பிரெஸ்லியைப் பற்றிய வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதில் அவர் பிரெஸ்லியின் முதல் காதலியான டிக்ஸி லாக்காக நடிக்கிறார். 

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நடாஷா, மலைகளில் ஏறுவதில் விருப்பம் கொண்டவர், விலங்கு உரிமைகள் மற்றும் புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி பேசுபவர்.

இரண்டு மாதங்களாக டேட்டிங் செய்தாலும் அவர்கள் ஏற்கனவே நெருக்கமாக உள்ளனர். இருவரும் ஒன்றாக அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

மேலும் படிக்க | எலான் மஸ்க்கின் கார்பன் காப்பி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News