திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பீஸ்ட் படம் முதல் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வரை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே பெரிய பட்ஜெட் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. இது திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. முதலில் வேறு நிறுவனங்களுக்கு வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான பின்னர், திடீரனெ அந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றிவிட்டதாக அறிவிப்புகளும் வெளியானது.
மேலும் படிக்க | ’ஐயா என ஏன் அழைத்தேன்?’ விஜய் ரசிகர்களுக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம்
குறிப்பாக, விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமை முதலில் அன்புச்செழியனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டான் படத்தின் வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே கைப்பற்றியது. அந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸாகி சுமார் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது கூட, திரைப்படங்களை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தங்களிடம் பிஸ்னஸ் கரெக்டாக இருப்பதால் திரைத்துறையினரே தங்களை அணுகி படங்களை வெளியிடுமாறு நிர்பந்திப்பதாகவும் கூறினார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பிரின்ஸ் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. சிறிய இடைவெளிக்குப் பிறகு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் படங்களை தமிழகத்தில் வெளியிட இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் வெளியிட விட்டுக் கொடுத்தது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | திருமணம் முடிந்த கையோடு நயன் - விக்னேஷ் சிவன் அடித்த விசிட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR