கௌதம் கார்த்திக்கின் 1947 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், புகழ் நடித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படம் ஏப்ரல் 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2023, 08:29 PM IST
  • 1947 படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
  • கௌதம் கார்த்திக், புகழ் நடித்துள்ளனர்.
  • முருகதாஸ் உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
கௌதம் கார்த்திக்கின் 1947 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்! title=

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இடம் 8 வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்த என்எஸ் பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படம் ஏப்ரல் 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.  கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், நீலிமா ராணி, போஸ் வெங்கட், மதுசூதன், ஜூனியர் எம்ஜிஆர், ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.  மேலும் ஏஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் என்பதாலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக இருந்தது.

மேலும் படிக்க: இந்த படங்கள் எல்லாம் கன்னட மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை!

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு பிரிட்டிஷ் இடமிருந்து சுதந்திரம் கிடைக்கிறது.  இந்த செய்தி கூட தெரிந்திடாமல் தென் மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை ரிச்சர்ட் என்ற ஒருவர் ஆட்சி செய்து வருகிறார்.  மிகவும் கொடூரமாக அங்குள்ள மக்களை துன்புறுத்தி வேலை வாங்கி வருகிறார்.  ரிச்சர்டின் மகனை கௌதம் கார்த்திக் கொன்றுவிடுகிறார், இதனால் கடும் கோபமாகும் அவர் அந்த ஊரையே ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் கொள்ளை நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை ஆகஸ்ட் 16 1947 படத்தின் ஓன்லைன்.

gauthamkarthik

கௌதம் கார்த்திக் மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு கூடுதலாக தனது உழைப்பை கொட்டியுள்ளார்.  வெயில், தூசு என எதையும் பொருட்படுத்தாமல் பரமன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.  நிச்சயம் இந்த படம் அவரது சினிமா கரியரில் ஒரு துருப்பு சீட்டாக இருக்கும்.  மறுபுறம் புகழ் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  வழக்கமாக தான் செய்யும் காமெடி கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் விலகி தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார்.  அறிமுக கதாநாயகியான ரேவதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே செய்துள்ளார், இருப்பினும் இன்னும் சற்று நன்றாக நடித்திருந்திருக்கலாம்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பிரிட்டிஸராக நடித்துள்ள அந்த இரண்டு பேரும் கச்சிதமாக அந்த கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளனர்.  இயக்குனர் பொன் குமாருக்கு இது தான் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத அளவிற்கு ஒரு சிறப்பான படத்தை எடுத்துள்ளார்.  காட்சிக்கு காட்சி திரைக்கதை மூலம் அசத்தியுள்ளார்.  நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக மாறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.  

gauthamkarthik

சான் ரோலனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருந்தது, குறிப்பாக பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து உள்ளது.  செலவை மிச்சம் பண்ணுவதாக எதற்கும் காம்ப்ரமைஸ் செய்யாமல் பிரேமிற்காக நன்றாக செலவு செய்துள்ளனர், அது படத்தினை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.  படம் ஆரம்பித்ததில் இருந்து இடைவெளி வரை சற்றும் தொய்வில்லாமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே செல்கிறது.  இரண்டாம் பாதியில் மட்டும் ஆங்காங்கே சிறிது தொய்வு ஏற்படுகிறது.  அதேபோல படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் பிரச்சனைகளும் உள்ளது.  அதனை பெரிதாக யோசிக்கவிடாமல் திரைக்கதையில் கையாண்டு உள்ளார் இயக்குனர் பொன்குமார்.  சுதந்திரத்திற்கு முன்பு மக்கள் பிரிட்டிஷாரிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என்பதை இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News