‘டகால்டி’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகவுள்ள ‘டகால்டி’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

Last Updated : Jun 6, 2019, 11:50 AM IST
‘டகால்டி’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது! title=

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகவுள்ள ‘டகால்டி’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

இயக்குநர் ஜாக்சன் இயக்கத்தில் A1 திரைப்படத்தில் நடித்து வரும் சந்தானத், இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘டகால்டி’. இத்திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் பெற்ற சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன
இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து திரைப்படங்கள் வெளியாவது தற்போது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது டகால்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு பெங்காலி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார். சந்தானமும் யோகிபாபுவும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றது. 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending News