பிரபல கன்னட நடிகரின் பிறந்தநாளுக்கு எருமையை பலி கொடுத்த ரசிகர்கள்!

கன்னட பாட்ஷா நடிகர் சுதீப்பின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் எருமையை பலி கொடுத்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 06:26 PM IST
பிரபல கன்னட நடிகரின் பிறந்தநாளுக்கு எருமையை பலி கொடுத்த ரசிகர்கள்! title=

கன்னட பாட்ஷா நடிகர் சுதீப்பின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் எருமையை பலி கொடுத்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர்.

kicha

மேலும் இவர் தனது சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர்.அதில் கர்நாடக அரசின் திரை விருது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு,ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இதுதவிர தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதனால் அவர் ரசிகர்கள் மனதில் அளவுக்கதிகமான அன்பை பெற்றவர்.

fans

இந்நிலையில், நடிகர் சுதீப் தனது 50-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி, பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி கட்அவுட் வைத்து பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.  அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு, அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து, சுதீப் வாழ்க..!! என கோஷமிட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ வனிதா விஜயகுமாருக்கு அடுத்த மேரேஜ் பிரபபோசல்! பதில் என்ன? ஆவலில் நெட்டிசன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News