துணிவுக்கும், குடும்பத்துக்கும் இருக்கு குட்டி ஸ்டோரி - விஜய் பேசப்போவது என்ன தெரியுமா?

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 23, 2022, 04:33 PM IST
  • வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை நடக்கிறது
  • விஜய் பேச்சு மீது பல மடங்கு எதிர்பார்ப்பு
  • அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது
துணிவுக்கும், குடும்பத்துக்கும் இருக்கு குட்டி ஸ்டோரி - விஜய் பேசப்போவது என்ன தெரியுமா? title=

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் நேரு உள் விளையாட்டரங்கில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நாளை நடக்கவிருக்கிறது. வாரிசு பட டீம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். தீ தளபதி பாடலை பாடிய சிம்பு வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுவதால் அவர் கலந்துகொள்ளமாட்டார் என பேச்சு எழுந்திருக்கிறது.

தான் நடித்த படங்கள் சர்ச்சைக்குள் சிக்கும்போதெல்லாம் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசும் விஷயங்கள் எப்போதும் ஹைலைட்டாக இருக்கும். ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கதைகள் சொல்வது, அரசியல் சம்பந்தமாக சில விஷயங்கள் பேசுவது என விஜய் பேச்சு சில நாள்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும்.

அதேபோல், திரையரங்குகள் ஒதுக்கீடு, அஜித்தைவிட விஜய்தான் நம்பர் 1 படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு பேசியது என வாரிசு படமும் சர்ச்சை வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறது. இதனால் விஜய்யின் பேச்சு மீது பலரின் பார்வையும் திரும்பியிருக்கிறது.

இந்தச் சூழலில் விஜய்யின் குடும்ப பஞ்சாயத்து விவகாரம் சமீபமாக அதிகம் எழுந்திருக்கிறது. எனவே தனது குடும்ப பஞ்சாயத்து குறித்து விஜய் மறைமுகமாக வாரிசு மேடையில் பேசலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘நம்ம நண்பர் அஜித் மாதிரி கோட் சூட் போட்டு வந்திருக்கிறேன்’ என விஜய் பேசியது பாராட்டைப் பெற்றது. தற்போது துணிவும் வாரிசுடன் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் சுமூகமாக இருக்க வேண்டும். எந்தப் பிரச்னையும் செய்துகொள்ளக்கூடாது என குட்டி ஸ்டோரி மூலம் விஜய் வலியுறுத்தலாம் என கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.

அதேசமயம், விஜய்தான் நம்பர் 1 என தில்ராஜு பேசியது குறித்து விஜய் என்ன பேசப்போகிறார். தில்ராஜு பேசியது தேவையற்றது என கூறுவாரா இல்லை அவர் கூறியதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் பேசுவாரா என்ற கேள்விதான் ரசிகர்களிடையே தற்போது அதிகம் எழுந்திருக்கிறது. ஆனால் மேற்கொண்டு அதுகுறித்து விஜய் மேடையில் பேசி அந்தப் பிரச்னையை பெரிதாக்க விரும்பமாட்டார் என்றே கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மேலும் படிக்க | வாரிசு ஆடியோ ரிலீஸில் அரசியல் பேசுவாரா விஜய்? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News