இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியாவின் மற்றுமொரு சேனல் அறிமுகம்

இந்தியாவின் பிற மாநிலங்கள் டெல்லி-என்சிஆர் முன்னேற்றங்களை அறிந்து கொள்வது முக்கியம் என்று ஜீ டெல்லி-என்சிஆர் ஹரியானா துவக்கத்தில் ஜீ குழுமத்தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 10, 2022, 08:30 PM IST
  • டெல்லி-என்சிஆர் செய்திகள்
  • இந்தியா முழுமைக்கும் முக்கியமான தலைநகர் செய்திகள்
  • ஜீ குழுமத்தின் மற்றுமொரு தொலைகாட்சி சேனல்
இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியாவின் மற்றுமொரு சேனல் அறிமுகம் title=

புதுடெல்லி: ஜீ மீடியா, ஞாயிற்றுக்கிழமை (2022 ஏப்ரல் 10) ஜீ டெல்லி-என்சிஆர் ஹரியானா சேனலை அறிமுகப்படுத்தியது. இந்த சேனலை மதியம் 2 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

ஜீ மீடியா ஞாயிற்றுக்கிழமை ஜீ டெல்லி-என்சிஆர் ஹரியானா சேனலை அறிமுகப்படுத்தியது. இந்த சேனலை மதியம் 2 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

தில்லி/என்சிஆர்/குர்கான் பகுதியிலிருந்து வரும் செய்திகளில் முழு கவனம் செலுத்தும் ஜீ மீடியாவின் முதல் சேனல் இதுவாகும்.

வெளியீட்டு விழாவில் பேசிய மாநிலங்களவை எம்.பி.யும், எஸ்சல் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுபாஷ் சந்திரா, நாட்டின் மற்ற மாநிலங்களை விட டெல்லி-என்சிஆர் மற்றும் ஹரியானாவில் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்றார்.

subash chandra

 

பல முக்கியமான விஷயங்கள் இங்கு நடக்கின்றன, அவை முழு நாட்டிற்கும் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியமானவை. இதன் அடிப்படையில் டெல்லி-என்சிஆர் பகுதிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்த சேனல் என்று ஜீ குழுமத் தலைவர் தெரிவித்தார்.

தில்லி/என்சிஆர்/குர்கான் பகுதியிலிருந்து வரும் செய்திகளில் முழு கவனம் செலுத்தும் ஜீ மீடியாவின் முதல் சேனல் இது என்பது குறிப்பிடத்தக்கது. துரிதமாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், Zee குழுமத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து சில நாட்களுக்கு முன் டாக்டர் சுபாஷ் சந்திரா குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நாட்டின் செய்தி சேனல்களில் முதன்மையான ஜீ மீடியாவின் மற்றுமொரு சேனல் தலைநகர் மற்றும் தலைநகர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்காக பிரத்யேகமாக இயங்கத் தொடங்கிவிட்டது.

மேலும் படிக்க | ZEE குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News