கிறிஸ்துமஸ் தினத்தில் DON? படக்குழுவின் சர்ப்ரைஸ் முடிவு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் DON படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 10:34 AM IST
கிறிஸ்துமஸ் தினத்தில் DON? படக்குழுவின் சர்ப்ரைஸ் முடிவு!  title=

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது DON என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கின்றார்.  லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இணைந்து இந்த படத்தினை தயாரித்து வருகின்றனர்.  குக்கு வித் கோமாளி சிவாங்கி, ஆர்ஜே. விஜய், எஸ்ஜே. சூர்யா மற்றும் மேலும் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

don

கல்லூரி வாழ்க்கையை பின்புலமாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது.  நேற்று DON படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.  அடுத்தபடியாக படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் தற்போது பார்த்துக் கொண்டுள்ளனர். 

don

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.  கிறிஸ்துமஸ் தினத்தில் DON படத்தின் டிரைலரை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.  மேலும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் DON படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிவகார்த்தி நடிப்பில் உருவாகிவரும் அயலான் படமும் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த மாதம் திரையங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய டாக்டர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ALSO READ சிவகார்த்திகேயனின் டான் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News