புகைப்பழக்கத்தை எதற்காக கைவிட வேண்டும்?... அனுபவம் பகிரும் வெற்றிமாறன்

புகைப்பழக்கத்தை ஏன் அனைவரும் கைவிட வேண்டுமென்பது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 7, 2023, 03:36 PM IST
  • வெற்றிமாறன் இந்தியாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர்
  • லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
  • மாணவர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்த்தினார்
புகைப்பழக்கத்தை எதற்காக கைவிட வேண்டும்?... அனுபவம் பகிரும் வெற்றிமாறன் title=

சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து 'இதயத் திரைப்பட விழாவை' நடத்தியது. இதில் பங்கேற்ற சிறந்த குறும்படங்களுக்கான விருதை இன்று பிரசாந்த் மருத்துவமனை அறிவித்தது. இந்த விருதை இயக்குனர் வெற்றிமாறன் வழங்கினார். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும்,'சேவ் யங் ஹார்ட்ஸ்' பிரசாரம் குறித்த இதழையும் வெற்றிமாறன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். ஃபிட்னஸ் என்பது வெறும் ஜிம்முக்கு சென்று தசைகளை வலுவாக்குவது மட்டுமல்ல. இன்னும் சிலர் ஜிம்முக்கு செல்வார்கள். அதன்பிறகு வந்து புகைப்பிடிப்பார்கள்; அதனால் ஒரு பயனுமில்லை. குறும்படம் எடுக்கும் மாணவர்கள் புகை, மதுவுடன் தான் ஸ்கிரிப்ட் எழுதியிருப்பீர்கள் என்பது தெரியும். எல்லோரும் அப்படித்தான் எழுதியிருப்போம். ஒரு கட்டத்தில் அது ஈஸியாக இருக்கலாம்; ஆனால், அதன் பிறகு அது அப்படியிருக்காது.

நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருநாளைக்கு 60 - 70 சிகரெட்டுகளை புகைப்பேன். என்னுடைய முதல் படம் எடுக்கும்போது ஒரு நாளைக்கு 170 - 180 சிகரெட்டுகளை புகைப்பேன். அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். என்னால் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்கமுடியவில்லை. என்னுடைய குரு பாலு மகேந்திரா ஒன்றை சொல்வார். ‘இயக்குநராக வேண்டுமென்றால் முதல் தகுதி என்ன?’ என்பது குறித்து சத்யஜித் ரேவிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘ஒரு இடத்தில் உங்களால் 8 மணி நேரம் தொடர்ந்து நிற்க முடியும் என்றால் மற்ற திறமைகள் தானாக வரும்” என்றாராம். அதற்கு அர்த்தம் நீங்கள் உடல் ரீதியாக ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.

Vetrimaaran

என்னால் அப்படியில்லாமல் போகும்போது நான் என்னை மாற்ற நினைத்தேன். இசிஜி எடுத்துப் பார்த்தேன்; அதில் மாற்றம் இருந்தது. ஆகவே என் மருத்துவர் என்னை புகைப்பழக்கத்திலிருந்து விடுபட வலியுறுத்தினார். புகைப்பிடித்துக் கொண்டே அதிலிருந்து மீள்வது குறித்தெல்லாம் யோசித்திருக்கிறேன். பின்னர் முழுமையாக அதிலிருந்து மீண்டுவிட்டேன். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்” என்று பேசினார். 

மேலும் படிக்க | 'இன்று அண்ணன், நாளை மன்னன்': போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News