மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படத்தின் தலைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 03:34 PM IST
  • பகாசூரன் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
  • செல்வராகவன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
  • மோகன் ஜி இப்படத்தை இயக்குகிறார்.
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்! title=

இயக்குனர் செல்வராகவன் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இவர் நடித்திருந்த விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்தது.  இவர் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிலையில், மோகன் ஜி  இயக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  2016ம் ஆண்டு தமிழில் வெளியான 'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ஜி.  

mohang

மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

இந்த படத்தை தொடர்ந்து அவர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார்.  குறைந்த பொருட்செலவில், நிறைவான படங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும்.  ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ் போன்றவர்களது நடிப்பில் வெளியான திரௌபதி படம் நாடக காதலை மையமாக உருவாக்கப்பட்டது, இப்படம் சாதி ரீதியான வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று சில தரப்பினர் இப்படத்திற்கு எதிராகவும், இப்படத்தை ஆதரித்து சில தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.  இருப்பினும் இப்படம் சிறப்பான வசூலை பெற்றது.  அதனை தொடர்ந்து மீண்டும் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா போன்றவர்களது நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படமும் சில சர்ச்சைகளை கிளப்பியது.

mohang

இந்நிலையில் மோகன் ஜி இயக்கக்போகும் புதிய படத்தில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் இவர் நடிக்கப்போகும் புதிய படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படத்தின் அதிகாரபூர்வ தலைப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தில் செல்வராகவனோடு நடிகர் நட்ராஜூம் இணையவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது.  அடுத்த திரைப்படத்தின் தலைப்பு #பகாசூரன், திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்" என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் பட பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News