முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகாவின் 'மனோகரி' படப்பிடிப்பு ஆரம்பம்

இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம் என இயக்குனர் நவாஸ் அகமது தெரிவித்துள்ளார். 

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Feb 4, 2022, 03:18 PM IST
முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகாவின் 'மனோகரி' படப்பிடிப்பு ஆரம்பம் title=

மகேஷ்வரன் நந்தகோபாலின் சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது " சிட்தி " இதை தொடர்ந்து தற்போது  தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் "மனோகரி" என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.

முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் (Snehan) மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மேலும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராதே மணியின் மகனான ராஜ்குமாரும் நடிக்கிறார். இவர் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார். தற்போது இந்த படம் மூலம் தமிழில் வில்லனாக அவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆண்டி இந்தியன் ஜெயராஜ் , தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கலைஞர்களின் விவரம் பின்வருமாறு:

ஒளிப்பதிவு  -  K V.மணி
இசை - கார்த்திக் ராஜா
பாடல்கள் - சினேகன்
எடிட்டிங்  -   SP அஹமது.  
கலை -    தென்னரசு
ஸ்டண்ட்   -  S.சுரேஷ்
நடனம் -    ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை -    ஹக்கீம் சுலைமான்.
மக்கள் தொடர்பு  - மணவை புவன்  
தயாரிப்பு - மகேஷ்வரன் நந்தகோபால்.
தயாரிப்பு நிறுவனம் - சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ்.
லைன் புரொடியுசர்   -    P.V. தமிழ்செல்வன் & வேலவன் தியாகு
கதை, திரைகக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் -   நவாஸ் அஹமது

ALSO READ | பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு லண்டனில் திருமணம்!

படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது கூறியபோது, "நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு (Dhanshika) மனோகரி இருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில் அவருக்கு கிடைத்துள்ளது. செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது." என்றார்.

இன்று படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் அவர்.

ALSO READ | மதுரை திரையரங்கில் வெளியான சூரரைப்போற்று!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News