இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்து எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். நீண்ட நாள் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக உருவாக்கியிருக்கும் அவர், கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மேலும் படிக்க | பாலிவுட்டில் கொடி நாட்டும் இசையமைப்பாளர் சாம் CS
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ் என இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். முதல் பாகம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர். நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார். அவருக்கு தமிழ் தெரியாது. இதனால் படத்தில் அவருக்கு யார் டப்பிங் பேசியிருப்பார்கள்? என்ற கேள்வி இருந்து வந்தது.
தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயுக்கு நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். மேலும், தொடர்ச்சியாக தனக்கு வாய்பு கொடுத்து வரும் இயக்குநர் மணி ரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். தீபா வெங்கட்டின் குரலில் நந்தினி திரையில் மிளிர இருக்கிறாள்.
மேலும் படிக்க | புஷ்பா 2வில் களமிறங்கும் சாய்பல்லவி: சுவாரஸ்யமான கதாப்பாத்திரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ