BiggBoss2: வெளில வந்த கையோட திருமணத்தை முடித்த டேனியல்....!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கனமே நடிகர் டேனியல் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

Last Updated : Sep 3, 2018, 04:49 PM IST
BiggBoss2: வெளில வந்த கையோட திருமணத்தை முடித்த டேனியல்....!  title=

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கனமே நடிகர் டேனியல் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி,அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், நித்யா, மஹத், டேனியல் உள்ளிட்ட 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் அனந்த்ஜி , ரம்யா, வைஷ்ணவி, நித்யா என 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த ‘பிக் பாஸ் 2’ தற்போது டேனியல் வெளியேற்றத்திற்கு பின் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  தற்போது புதிதாக விஜயலட்சுமி வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்.

நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் டேனியல் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள டேனியல், ``எனது வாழ்வின் முக்கியமான இந்தத் தருணத்தை சில தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. புதுமணத் தம்பதிகளாக வாழ்க்கையை தொடங்கும் எங்களுக்கு உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் கோருகிறேன்.

 

Trending News