ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. அஜித்தும், வினோத்தும் இணைந்த முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது. மேலும், பொங்கல் தினத்தன்று வாரிசு படமும் வெளியாகவிருப்பதால் பொங்கலுக்கு துணிவா, வாரிசா என்ற போட்டி தற்போதே உருவாகி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இதற்கிடையே துணிவு படத்தில் அஜித்திற்கு பதிலாக 70 சதவீதம் சுதாகர் என்பவர்தான் நடித்தார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. அதனை அடிப்படையாக வைத்து ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட தகவல் உறுதியானது இல்லை. விஜய் ரசிகர்கள் எடிட் செய்து அவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் துணிவு படத்தில் அஜித் நடிக்கவில்லை என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸே உறுதி செய்துவிட்டதாக ஏகப்பட்ட மீம்ஸ்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகின. அது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட மீம்ஸ் என்பது தற்போது உறுதியானது.
மேலும், துணிவு படத்தில் அஜித்தான் 100 சதவீதம் நடித்திருக்கிறார் என்பதையும் படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட செய்தி ரசிகர்களால் முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி
மேலும் படிக்க | விஜய்க்கு வில்லனாக அழைத்த லோகேஷ் கனகராஜ்... மறுத்துவிட்ட கார்த்திக்?
மேலும் படிக்க | தளபதி 67 பூஜையிலிருந்து ஷூட்டிங்வரை - புதிய அப்டேட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ