கமல் மீதான வழக்கு: 22-ம் தேதி வாரனாசி கோர்ட்டில் விசாரணை

Last Updated : Nov 5, 2017, 09:02 AM IST
கமல் மீதான வழக்கு: 22-ம் தேதி வாரனாசி கோர்ட்டில் விசாரணை title=

கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். 

கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

இதற்கிடையே, கமல்ஹாசன் இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் {ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ)} ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

மேலும், கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். அதில், கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாக கூறி மேலும் அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்நிலையில் வரும் 22-ம் தேதி விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்து இருப்பதாக கமலேஷ் சந்திர திரிபாதி நேற்று தெரிவித்தார்.

Trending News