நடிகை மற்றும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷுக்கு Coronavirus Positive உறுதி

நடிகை மற்றும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ் (Sumalatha Ambareesh) திங்களன்று மேற்கொண்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2020, 09:57 PM IST
நடிகை மற்றும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷுக்கு Coronavirus Positive உறுதி title=

பெங்களூரு: நடிகை மற்றும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ் (Sumalatha Ambareesh) திங்களன்று மேற்கொண்ட கொரோனா (Coronavirus Positive) சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுக்குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பணியின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் (Coronavirus Hotspots) பகுதிகளை பார்வையிட்டார். அதன் பிறகு சனிக்கிழமை அவருக்கு தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதாக சுமலதா தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் கூறியுள்ளார்.

பிற செய்தி படிக்கவும் | முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பி.வளர்மதிக்கு கொரோனா தொற்று...!!

மேலும் அவர் கூறுகையில், "மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்" மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமீபத்தில் அவர் சந்தித்த நபர்களின் விவரங்களை அரசு அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும் சுமலதா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அண்மைய காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தானாக முன்வந்து பரிசோதனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

தனக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொதுமக்களின் ஆசீர்வாதம் இருப்பதால் இந்த நோயிலிருந்து வேகமாக குணமடைவேன் என்று சுமலதா அம்பரீஷ் கூறினார்.

சுமலதா (Sumalatha) அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இந்தியத் திரைப்பட நடிகையாக இருந்தார். அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார் குறிப்பிடத்தகது.

பிற செய்தி படிக்கவும் | பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெக்மூத் குரேஷிக்கு Coronavirus பாசிடிவ்

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மறைந்த தனது கணவரின் தொகுதியான மாண்டியா தொகுதியில், முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரை தோற்கடித்து  வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News