நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்

Sexual Allegation On Nivin Pauly: கேரள திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வரும் நிலையில், நிவின் பாலி மீதும் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2024, 03:09 PM IST
  • படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அத்துமீறியதாக புகார்.
  • ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு அமைப்பு
  • இந்த குழுவிடம் அந்த பெண் புகார் அளித்திருக்கிறார்.
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் title=

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். 

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும் 

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார். 

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். 

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | The GOAT Movie Cast And Crew Salary: விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News