பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் அரசை பா.ஜ.கவினர் கடுமையாக சாடினர். பேட்மின்டன் பிரபலமான சாய்னா நேவாலும் இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோழைத்தனமான செயல் என சாடினார். நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால், நாடும் பாதுகாப்புடன் இருப்பதாக கருத முடியாது எனத் தெரிவித்தார்.
ALSO READ | சித்தார்த்தை ஏமாற்றியது யார்; வைரலாகும் பதிவு
இவரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், நாட்டை பாதுகாக்க பாதுகாவலர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும், அந்த டிவீட்டில் இடம்பெற்றிருந்த சில வார்த்தைகள் ஆபாச தொனியில் இருப்பதாக கூறி, சித்தார்த்தை வசைபாடினர். இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா முதல் அரசியல் பிரபலங்கள் வரை என பலரும் சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட சித்தார்த், அதில் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
ALSO READ | கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: கடுப்பில் சித்தார்த் போட்ட பளீர் பதில்
தவறான பொருள்படும்படி அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்த சித்தார்த், நீங்கள் எப்போதுமே என் சாம்ப்யன் தான் என்றும் கூறினார். அவரின் மன்னிப்பு கடிதத்தையும் ஏற்பதாக சாய்னா கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை காவல்துறை, இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR