தமிழ் திரையுலகின் ‘டாப்’ நடிகர்கள், தங்களது படங்களை பெரிய பண்டிகையின் போது வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த பொங்கல் பண்டிகையை (Pongal 2024) முன்னிட்டு, நான்கு முக்கிய தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தனுஷின் கேப்டன் மில்லர் படமும் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு பின்னர் வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு வெளியான 4 படங்கள்:
இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இதில், கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடைப்பெற்று வந்தன. அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளும், கடந்த 5 வருட்களாக நடைப்பெற்று வந்தன. இதனால், இவ்விறு படங்களின் மீதும் ரசிகர்களுக்கு அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்த இரு படங்களும் முற்றிலும் மாறு பட்ட கதை அமைப்புகளை கொண்டதாக இருந்தன. ஆனாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம், இந்த இரண்டில் எது என்பதை பார்ப்பாேமா?
கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள்:
கேப்டன் மில்லர் படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்கியுள்ளார். தனுஷுடன் சேர்ந்து, கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
கேப்டன் மில்லர் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், படம் பார்க்க நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.
#CaptainMillerReview: Good Watch
Full of Violence Guns and Bombs
If you love violence then it's for u pic.twitter.com/rA2x40Xohb— Nagulan Jayaprasath (@NagulanJayapras) January 12, 2024
மேலும், கொலை த்ரில்லர் பிடித்த நபர் என்றால் இந்த படம் உங்களுக்குத்தான் என்றும் கூறுயிருக்கிறார்.
ஜாலியா ஒரு படம்..கொலையா ஒரு படம்..
இரண்டு படங்களையும் குறிப்பிட்டு ஒரு ரசிகர் பதிவினை வெளியிட்டுள்ளார். ஆனால் பொங்கல் வின்னர் அயலான்தான் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள பதிவில், “தியெட்டர் போய் ஜாலியா இருக்க அயலான் போங்க..தியேட்டர்ல போய் சாக வேண்டுமா? கேப்டன் மில்லர்க்கு போங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டர்ல போய் ஜாலியா இருக்கணுமா..?#Ayalaan க்கு போங்க,
தியேட்டர்ல போய் சாகனுமா..?#CaptainMilIer க்கு போங்க,
Thats All #Ayalaan Clean Pongal Winner
#AyalaanPongal #AyalaanFDFS #CaptainMillerPongal #CaptainMillerReview
— (@kavin_55) January 12, 2024
மேலும், உண்மையான வின்னர் யார் என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனுஷிற்கு பாராட்டு:
தனுஷின் நடிப்பை பாராட்டி ஒரு ரசிகர் பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், தனுஷ் தனது நடிப்பில் அதகளம் காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார்.
#CaptainMillerReview splendid performance from @dhanushkraja
Easily one of the best film for D in terms of action and performance@gvprakash 's bgm erupts
Festive treat for action movie goers..
Must watch
Book your tickets in @bookmyshow
AASCAR MULTIPLEX SALEM@SathyaJyothi pic.twitter.com/xU53mZiT5K— Aascar Multiplex (@Aascarmultiplex) January 12, 2024
மேலும், ஜி.வி.பிரகஷ் குமாரின் பின்னணி இசை மாஸாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயலான் விமர்சனம்:
அயலான் படத்திற்க் ஒரு ரசிகர் சிங்கிள் லைனில் விமர்சனம் கொடுத்துள்ளார்.
Ayalaan Vendran Makkal Manadhil Idam Pidithan#Sivakarthikeyan #Ayalaan
(@guruawesome) January 12, 2024
அந்த பதிவில், அயலான் வென்றான் மக்கள் மனதில் நின்றான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் பாராட்டு..
அயலான் படத்தின் அம்சங்கள் அனைத்தையும் ஒரு ரசிகர் பாராட்டியுள்ளார்.
#Ayalaan - 4.25/5
A thrilling Adventure with visual Grandeur of Comedy thriller Sci-Fi film@Ravikumar_Dir Screenplay @Siva_Kartikeyan Effortless @arrahman thanya padathukku periya Palame
Kids + Families Kondata Poranga #AyalaanReview
— SOUTH FDFS (@southfdfs) January 12, 2024
அவர் அதுகுறித்து வெளியிட்டுள்ளா பதிவில், படம் நல்ல காமெடி சையின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ரவிகுமாரின் திரைக்கதை நன்றாக இருப்பதாகவும், சிவகார்த்திகேயனின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என்றும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
முதல் பாதி-இரண்டாம் பாதிக்கு விமர்சனம்:
அயலான் படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
#AyalaanPongal extraordinary first half followed by avg second half. Comedy and vfx is the major plus. 2nd half has lags but works at some points. Bgm and songs were the biggest disappointment overall good #AyalaanReview #AyalaanFromToday #Sivakarthikeyan #AyalaanFDFS
— Akash (@Akash11447887) January 12, 2024
மேலும், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். மொத்தத்தில் படம் நன்றாக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | Dhanush Salary: ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ