Kangana Ranaut : கங்கனா கூட வேலை செஞ்சதுதான் என்னோட பெரிய தவறு : கொதித்த இயக்குநர்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்தை இயக்குநர் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார். கங்கணா செய்த தவறு என்ன? இயக்குநர் சொல்வது என்ன!

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 6, 2022, 01:00 PM IST
  • கங்கனாதான் என் வாழ்வின் மிகப்பெரிய தவறு
  • வருந்திய பிரபல பாலிவுட் இயக்குநர்
  • அப்படி என்ன செய்தார் கங்கனா ரணாவத்?
Kangana Ranaut : கங்கனா கூட வேலை செஞ்சதுதான் என்னோட பெரிய தவறு : கொதித்த இயக்குநர் title=

2006 ஆம் ஆண்டு Gangster படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். பின்னர் 2008ஆம் ஆண்டு தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டு ஹிந்தியில் வெளியான Fashion திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது கங்கனாவை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து இந்தியாவின் முக்கிய ஹீரோயின் ஆனார் கங்கனா. தற்போதைய காலத்தில் வலதுசாரி அரசியல் கருத்துகளையும் பொது மேடைகளில் கங்கனா பேசி வருகிறார். இவரின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையாவது வழக்கம். ஆனால் கங்கனா இந்த முறை வேறு விதமாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க | 'புஷ்பா-2' படத்திலிருந்து விலகிய பஹத் பாசில்? விஜய் சேதுபதி தான் காரணமா?

2017ஆம் ஆண்டு கங்கனா நடித்த சிம்ரன் திரைப்படத்தை இயக்கியவர் ஹன்சல் மேஹ்தா. இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில் ஹன்சல் மேஹ்தாவிடம் கேள்வில் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “சிம்ரன் என்னுடைய மிகப்பெரிய தவறு (Massive Mistake)” என்று பதிலளித்தார். 

“எனக்கும் கங்கனாவுக்கும் சரியாக ஒத்துப் போகவில்லை” என்று ஹன்சல் பேசிக் கொண்டிருக்கும்போதே நெறியாளர் அவரிடம் “எடிட்டிங் சமயத்தில் கங்கனாவின் தலையீடு இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆத்திரத்துடன் பதில் அளித்த ஹன்சல், “எடிட்டிங் நேரத்தில் எல்லாம் ஒரு கோளாறும் இல்லை. ஏனென்றால் மொத்த படத்தையும் இயக்கியதே கங்கனாதான்” என்றார்.

மேலும் படிக்க | பிசிஓஎஸ் பாதிப்பு குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்

அவரது இந்த பேச்சு பாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2017ஆம் ஆண்டே கங்கனா இயக்குநரை பணிசெய்ய விடாமல் தனது அதிகாரத்தை அவரிடம் பயன்படுத்தியுள்ளார் என்பதை ஹன்சலின் பேச்சு வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. மேலும் கங்கனாவுடன் வேலை செய்ததுதான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஹன்சல் பேசியிருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News