பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

BB 7 Title Winner Archana: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரமாண்டமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் டைட்டில் வின்னருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படயுள்ளது என்கிற தகவல் இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 14, 2024, 06:58 AM IST
  • மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
  • வைல்ட் கார்டு மூலம் நுழைந்து டைட்டிலை வெல்லும் முதல் வெற்றியாளர் அர்ச்சனா ஆவார்.
  • அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது.
பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. எவ்வளவு சம்பளம் தெரியுமா? title=

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா: விஜய் டிவியில் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரமாண்டமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் டைட்டில் வின்னருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படயுள்ளது என்கிற தகவல் 
இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7: 
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக். 1ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா,  ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன், அனன்யா எஸ் ராவ், விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் முதல் நாள் அன்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். 

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்-எதை முதலில் பார்க்கலாம்? ரசிகர்களை கவர்ந்த படம் எது?

அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்னபாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் 28ஆவது நாள் அன்று வைல்ட் கார்டு மூலம் வெளிவந்தது. அனன்யா, விஜய் வர்மா ஆகியோர் எவிக்டான பின்னர் 56ஆவது நாள் அன்று மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர். இருப்பினும் அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் கடைசி Finale வரை வந்தனர்.

பிக்பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலே எப்போது?
தமிழ் தனியார் சேனலான விஜய் டிவியிலும், டிஸ்னி பிளஸ் ஹோட்ஸ்டாரிலும் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே சூட்டிங் இன்று பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையோடு முடிவடையை இருக்கிறது. 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாகும்.

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யார்?
அந்த வகையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அதிரடியான மாற்றம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாகவும் அவரை தொடர்ந்து ரன்னராக மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கி 28வது நாள் அன்று வைல்ட் கார்டு மூலம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார். அந்த வகையில், வைல்ட் கார்டு மூலம் நுழைந்து டைட்டிலை வெல்லும் முதல் வெற்றியாளர் அர்ச்சனா ஆவார். 

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் சம்பளம்:
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் 7 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது. 

அரச்சனாவுக்கு சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலம் இருக்கும் நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். அதுபோல இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவருடைய விளையாட்டுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News