பிக்பாஸில் இன்று திடீர் ட்விஸ்ட்... வெளியேறிய முக்கிய போட்டியாளர்... இவ்வளவு சம்பளமா!

Bigg Boss Tamil 7: பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட விஜய் வர்மா இன்று எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2024, 06:24 PM IST
  • இன்று 100ஆவது நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • இந்த வார இறுதியில் பிக்பாஸ் 7 Finale நடைபெறுகிறது.
  • வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை என கூறப்படுகிறது.
பிக்பாஸில் இன்று திடீர் ட்விஸ்ட்... வெளியேறிய முக்கிய போட்டியாளர்... இவ்வளவு சம்பளமா! title=

Bigg Boss Tamil 7 Latest Update In Tamil: தமிழ் தனியார் சேனலான விஜய் டிவியிலும், டிஸ்னி பிளஸ் ஹோட்ஸ்டாரிலும் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அதன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது எனலாம். இன்று 100ஆவது நாள் என்ற நிலையில், வரும் ஜன.14ஆம் தேதி பிரம்மாண்ட் இறுதிநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கமாக ஒவ்வொரு பிரம்மாண்ட இறுதிப்போட்டி மாலை 6 மணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. 

நெருங்கும் கிளைமேக்ஸ்

விஷ்ணு நேரடியாக Finale போட்டியாளராக தேர்வான நிலையில், அவரை தவிர்த்து 5 பேர் போட்டியில் உள்ளனர். மாயா கிருஷ்ணன், விஜய் வர்மா, மணிசந்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த வாரம் இறுதியில், பிக்பாஸ் 7 டைட்டிலை வென்று ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை தட்டித்தூக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு! ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி!

100ஆவது நாள்

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ்டாக Mid-Week Eviction செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வரையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் இன்றைய எபிசோடில் வெளியேற்றப்படுவார் என தகவல் கூறப்படுகிறது. அதில், குறைந்த வாக்குகளை விஜய் வர்மா (Vijay Varma Eviction) பெற்றிருப்பதாகவும், அவர்தான் இன்று வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் எனவும் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அர்ச்சனா போன்றில்லாமல் விஜய் வர்மா தொடக்கத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அவர் 21ஆவது நாளிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அதன் பின் வைல்ட் கார்டில் அவர் என்ட்ரி கொடுத்தார். வைல்ட் கார்ட் மூலம் 56ஆவது நாள் அன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த இவர் 100ஆவது நாளான இன்று வெளியேறுகிறார் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே தகவல்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றன. 

விஜய் வர்மா சம்பளம்

அப்படி விஜய் வர்மா (Vijay Varma Salary In Bigg Boss 7) இன்று எவிக்ட் செய்யப்பட்டால் அவர் பிக்பாஸ் மூலம் எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதாவது முதல் 21 நாள்கள் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதில் ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 21 நாளைக்கு ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் அவருக்கு சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்த 44 நாள்களையும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பிக்பாஸ் மூலம் விஜய் வர்மா சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிக்பாஸ் சீசன் 7 தொடரின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட நடிகை விசித்ரா கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். விசித்ரா எவிக்ட் ஆனது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது. .

மேலும் படிக்க | கேம் என்றாலே பிரச்சினைதான் - இமெயில் பட நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News