தீர்ந்தது குழப்பம்: 'பிக் பாஸ் தமிழ் 4' இல் எவிக்ட் ஆனது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளிவந்தது.

Last Updated : Nov 8, 2020, 02:21 PM IST
தீர்ந்தது குழப்பம்: 'பிக் பாஸ் தமிழ் 4' இல் எவிக்ட் ஆனது இவர்தான்! title=

பிக் பாஸ் (Bigg Boss Tamilநிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளிவந்தது. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள உறுதிசெய்யப்பட்ட தகவலின்படி சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார் என்பது தெரிகிறது. இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி விட்டார் என்ற தகவல் நிச்சயம் அவரது ஆர்மியினர்களுக்கு வருத்தத்திற்குரிய செய்தியாகும். 

 

ALSO READ | பிக் பாஸ் 4 இல் மரியாதை இழந்தததார் பாலா - சுஜா கண்டனம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மிக அருமையாக விளையாடிக்கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் இறுதிவரை நீடிப்பார் என்று நினைத்த நிலையில் மிகக்குறுகிய காலத்திலேயே பிக்பாஸ் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது உண்மையில் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அதே நேரத்தில் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. 

இந்நிலையில் அடுத்தடுத்த புரமோ வீடியோக்கள் மற்றும் பிக்பாஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களில் இருந்து இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை இன்றி மாலை வரை பொறுத்து இருந்து பார்போம்.!

 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4 இல் பாலாவுக்கு ரெட் கார்டு வெளியேற்றமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News