தனது அறுவை சிகிச்சை பற்றி மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம் ஷிவின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான திருநங்கை ஷிவின் திருநங்கைகள் செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 07:28 PM IST
  • பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திருநங்கை ஷிவின்.
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவினுக்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • திருநங்கைகள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை பற்றி ஷிவின் பேசியுள்ளார்.
தனது அறுவை சிகிச்சை பற்றி மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம் ஷிவின்! title=

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகியுள்ளனர், அந்த வகையில் பிரபலமானவர் தான் திருநங்கை ஷிவின்.  நாட்டில் பல்வேறு துறைகளில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் திருநங்கைகளின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது.  முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து எனும் திருநங்கை போட்டியாளராக அறிமுகமானார்.  இவரது சோகமான கதை பார்வையாளர்களை கண்கலங்க செய்தது, நமீதா பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சில நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தார்.  

மேலும் படிக்க | சமந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாகுந்தலம்..மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

அதன்பின்னர் பிக்பாஸ் 6-வது சீசனில் மற்றொரு திருநங்கை ஷிவின் அறிமுகப்படுத்தப்பட்டார்.  இவரும் நமீதாவை போல பாதிலேயே சென்றுவிடுவாரோ என்று அனைவரும் நினைக்கையில், நிகழ்ச்சியில் நிலைத்து நின்று அனைவருக்கும் கடும் டஃப் கொடுத்தார்.  நிகழ்ச்சியின் இறுதி வரை இவருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.  நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ஷிவினை அசீம் மோசமாக பேசி வந்தார், ஆனால் ஷிவின் எதைப்பற்றியும் மனம் தளராது தைரியமாக நின்று போராடி பல ரசிகர்களின் மனதை வென்றார்.  இந்த நிகழ்ச்சியில் ஷிவினை பெருமைப்படுத்தும் அளவிற்கு இதுவரை இல்லாத வகையில் அவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.  தனது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஷிவினை பல குடும்பத்தினர் தங்களது சொந்த மகளாக ஏற்றுக்கொண்டனர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதிர் மீது ஷிவின் வைத்திருந்த பாசம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.  கதிரை காதல் உணர்வோடு ஷிவின் பார்க்கும் பார்வைகள் ரசிக்கும்படியாக இருந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஷிவின் வெளியேறியதும் கடை திறப்பு விழாக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அனைத்திலும் பங்கேற்று வருகிறார்.  சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஷிவின் அளித்த பேட்டியில் தனது அறுவை சிகிச்சை குறித்து பேசியுள்ளார்.  அவர் கூறுகையில், "திருநங்கைகள் HRT (ஹார்மோன் மாற்று சிகிச்சை) செய்ய 2 ஆண்டுகள் ஆகும், அதன் பிறகு அவர்கள் ஒரு உளவியலாளரிடம் ஆலோசனை பெறுவது, SRS (பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை) போன்றவற்றை அவர்களது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.  சிலருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது.  பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று ஷிவின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News