கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது, ஜிபி முத்து இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2022, 09:59 AM IST
  • பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
  • கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
  • விஜய் டிவி மைனா ஒரு வாரத்திற்கு பிறகு இணைந்துள்ளார்.
கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து! title=

கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.  பிக் பாஸ் ஆறாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நிகழ்ச்சிகளை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்,  இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த சீசனில் போட்டியாளர்கள் இவர்கள் என்று பல்வேறு யூகங்களும், செய்திகளும் வெளியானது.

மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்

எப்போதும் இல்லாமல் இந்த சீசன் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களாக பலரும் எதிர்பார்த்த ஜி பி முத்து இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டுள்ளார். அவர் வீட்டிற்குள் சென்றதிலிருந்து அவரது வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  கமல்ஹாசனைப் பார்த்து ஆதாமா? அப்படின்னா என்ன என்று கேட்டது தொடங்கி வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவருடன் அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த சீசனில் சிறந்த கண்டஸ்டண்ட் என்று பலரும் ஜிபி முத்துவை புகழ்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜிபி முத்து தனக்கு ஆடைகள் வேண்டும் என்று பிக் பாஸிடம் கேட்டுக் கொண்டார். தான் வந்ததில் இருந்து சரியாக உடைகள் தனக்கு வந்து சேரவில்லை எனவும், நான்கு உடைகளையே திரும்பி திரும்பி போட்டுக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இனி எனக்கு உடைகள் வரவில்லை என்றால் கோமணத்தை கட்டிக் கொள்ள உள்ளதாகவும் பிக்பாஸிடம் தெரிவித்துள்ளார்.  கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன் என பிக் பாஸ்க்கு சவாலும் விடுத்துள்ளார் ஜிபிமுத்து. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்குள் பறந்து சென்ற விஜய் டிவி பிரபலம்; முதல் வைல்டு கார்டு போட்டியாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News