பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள முதல் படம்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

Bigg Boss Poornima Ravi: 'பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி' படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 26, 2023, 07:44 AM IST
  • பூர்ணிமா ரவி நடித்துள்ள முதல் படம்.
  • பொங்கல் அன்று ஓடிடியில் வெளியாகிறது.
  • ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள முதல் படம்! ரிலீஸ் எப்போது தெரியுமா? title=

Bigg Boss Poornima Ravi: யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி.  தனது தனிப்பட்ட வீடியோக்களின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.  யூடியூபில் தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிடும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.  பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ளார் பூர்ணிமா.  அவர் வீட்டிற்குள் சென்ற நாளில் இருந்து தனது திறமைகளை நிரூபித்துள்ளார்.  நடனம் ஆடுவது, நடிப்பு என ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன்பு பூர்ணிமா ரவி நடித்துள்ள செவப்பி படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது.

மேலும் படிக்க | அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?

நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ்.  அந்த வரிசையில், இப்போது அவர்கள் 'செவப்பி' என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் 'பிக் பாஸ்' புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.

sevappi

1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான். பாசப்பிணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா?   என்பதுதான் "செவப்பி"யின் கதை.

கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில், பல கிராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளது 'செவப்பி'. பூர்ணிமா நடித்துள்ள இந்த 'செவப்பி' ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று பொங்கல் பண்டிகைக்கு ப்ரீமியர் ஆகிறது. 

இந்த படத்தில் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு - மனோகரன் எம், எடிட்டிங் & விஎஃப்எக்ஸ் - வச்சு லட்சுமி, இசை - ஏ.பிரவீன் குமார், ஒலி வடிவமைப்பு - ஷெஃபின் மாயன், கலை - ஆசை தம்பி, ஆக்‌ஷன் கோரியோகிராஃபி - அபிஷேக் ஸ்ரீனிவாஸ், விளம்பர வடிவமைப்பு - ராகவன், நிர்வாகத் தயாரிப்பாளர் - எஸ்.வினோத்குமார் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். 

மேலும் படிக்க | DD3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த படத்தை இயக்கும் தனுஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News