பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா சொன்ன அந்த ‘மாஸ்’ ஹீரோ யார்?

Bigg Boss Vichithra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை விசித்திரா தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசி உள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Nov 22, 2023, 05:58 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வர உள்ளனர்.
  • பிக்பாஸ் வீடு போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா சொன்ன அந்த ‘மாஸ்’ ஹீரோ யார்?  title=

மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய சர்ச்சை சம்மன் அனுப்பும் அளவுக்கு பெரிதாகியுள்ளது. இந்த சூழலில் தான் பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டுள்ள நடிகை விசித்ரா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் மாஸ் ஹீரோ ஒருவரால் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளது கடும் அதிர்ச்சியை சினிமா பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. விசித்ராவுக்கு பாலியல் அழைப்பு விடுத்த அந்த மாஸ் ஹீரோ யார்? விசித்ராவுக்கு நடந்தது என்ன என்பதை காணலாம்.  பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 52 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த முறை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகள் கொஞ்சம் குண்டக்க மண்டக்க உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி பிக்பாஸ் சென்று கொண்டிருக்க, புதிய டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தங்கள் வாழ்க்கையில் தங்களை தடுமாறச் செய்த நிகழ்வு ஒன்றை பகிரச்சொல்லி உத்தரவு வந்தது. 

மேலும் படிக்க | அடுத்த மாதம் 2 நாட்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது - திரையுலகம் அறிவிப்பு!

அந்த டாஸ்கில் பேசிய நடிகை விசித்ரா, கடந்த 2001-ம் ஆண்டு தனக்கு நடந்த மோசமான துன்புறுத்தல் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில், 2001-ம் ஆண்டு தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றில் மாஸ் ஹீரோவுடன் நடித்ததாகவும், அப்போது ஹோட்டலில் முதல்முறையாக தன்னை பார்த்த அந்த ஹீரோ come to my room என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மிரண்டுபோன அவர் அன்று இரவு முழுவதும் தனது அறையை பூட்டிவிட்டு பயத்துடன் இருந்ததாக விசித்ரா தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த நாட்களில் அந்த ஹீரோவிடம் இருந்து தப்பிக்க வெவ்வேறு ரூம்களில் ஹோட்டல் மேனேஜர் உதவியுடன் தங்கியுள்ளாராம். 

சில சமயங்களில் இவர் இருக்கும் ரூம் நம்பர் தெரிந்துவிட்டால் இரவு முழுவதும் கதவை தட்டும் சத்தம் கேட்குமாம். ஆனால் அவர் கதவை திறக்கவில்லையாம். இப்படிப்பட்ட சூழலில் தான் படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சி எடுக்கும் போது கூட்டமாக இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள் மத்தியில் புகுந்து ஓட வேண்டிய சீனில் வேண்டெமென்றே தன் மீது பாலியல் அத்துமீறல் நடந்ததாகவும், தன் உடலில் சிலர் கைவைத்ததாகவும் கலங்கியுள்ளார் விசித்ரா. அதோடு தன் மீது பாலியல் அத்துமீறல் செய்த நபரை பிடித்து ஸ்டண்ட் மாஸ்டர் முன் நிறுத்திய போது, செட்டில் அனைவர் முன்னிலையிலும் தன்னை கன்னத்தில் அறைந்து அசிங்கப்படுத்திவிட்டாராம். 

இதன் பிறகு சினிமாவில் இருந்தே விலகியுள்ளார் விசித்ரா. பலரும் விசித்ரா திருமணம் செய்துகொண்டதால் சினிமாவில் இருந்து விலகியதாக கூறினர். ஆனால் உண்மைக்காரணம் இதுதானாம். தன் மீது நடந்த பாலியல் துன்புறுத்தலை அடுத்தே சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 7-ல் அதிக பார்வையாளர்களை கவர்ந்தவராக வலம் வரும் விசித்ரா இப்படி ஒரு குற்றச்சாட்டை மாஸ் ஹீரோ மீது வைக்க, அனைவரும் யார் அந்த மாஸ் ஹீரோ என தேடி வருகின்றனர். உங்களுக்கு அந்த மாஸ் ஹீரோ யார் என தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க | நயன்தாராவுடன் நடிக்க நடிகர் ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News