பிக்பாஸில் ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட ‘அந்த’ நபர்..! யார் தெரியுமா..?

Bigg Boss 7 Tamil Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 22, 2023, 05:23 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்‌ஷன் நடக்கிறது
  • இதில் ரெட்கார்டு காண்பிக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்
  • அந்த நபர் யார் தெரியுமா?
பிக்பாஸில் ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட ‘அந்த’ நபர்..! யார் தெரியுமா..?  title=

சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு ஒரு நபர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 7:

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பல பலமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. சுமார் 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 3 பேர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். 

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்:

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து, முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் அனன்யா ராவ். முதல் வாரத்தின் நாமினேஷனில் இவருக்கு பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பலர் வாக்களித்திருந்தனர். இதையடுத்து மக்களின் வாக்குகளை பெறாததால் இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியவர், பவா செல்லதுரை. கதைசாெல்லியான இவர், தினமும் பிக்பாஸ் இல்லத்தில் அனைவருக்கும் ஒவ்வொரு கதையை சொல்லி வந்தார். இவர் கூறிய கதைகள் சில, போட்டியாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர் படிப்பு குறித்து பேசிய சில விஷயங்களும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தவர்களையும் வெளியில் இருந்தவர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. அனன்யா வெளியேறிய அடுத்த நாளே, தன்னால் இந்த கேமை தொடர முடியாது என்று கூறி அவரும் இந்த இல்லத்தில் இருந்து வெளியேறினார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7... இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? - அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!

மூன்றாவதாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நபர்..

பிக்பாஸ் இல்லத்தில் உள்ள மற்றொரு ஸ்ட்ராங் போட்டியாளர், விஜய். இவர், பிக்பாஸ் போட்டியில் இருந்து ‘ரெட் கார்டு’ காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காரணம் என்ன? 

விஜய்க்கும் விஷ்ணுவிற்கும் முதல் வாரத்திலேயே சண்டை வந்தது. அப்போது விஜய், “வெளியில் என்னை பிடித்த பல பேர் இருக்கிறார்கள். நீங்கள் என்னை எதையாவது செய்தால் அவர்கள் உங்களை ஏதாவது செய்து விடுவார்கள்” என்று கூறினார். இது, நேரடியாக ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுவது போல இருந்தது. இதையடுத்து, அந்த வாரத்திலேயே கமல்ஹாசன் விஜய்க்கு மஞ்சள் கார்டினை வார்னிங் ஆக காண்பித்தார். அதிலிருந்து விஜய், கொஞ்சம் அமைதியாகவே கேம் விளையாடி வந்தார். சமீபத்தில் ஆக்ஸிஜன் பாட்டில்களை சேகரிக்கும் டாஸ்க் நிகழ்த்தப்பட்டது. அதில், பாட்டில்களை புடுங்குவதில் இருந்து தடுப்பவர்களாக விஷ்ணுவும் விஜய்யும் செயல்பட்டனர். அப்போது விஜய் விஷ்ணுவின் கழுத்தினை பிடித்து விட்டார். அடுத்த ரவுண்டில் பிரதீப்பும் விஜய்யும் மோதினர். அப்போது விஜய், பிரதீப்பை ஸ்மாக் போட்டுவிட்டார். இதில் பிரதீப்பின் முதுகு மற்றும் தலையில் அடிப்பட்டது. இது, பிக்பாஸ் இல்லத்தில் இருந்தவர்கள் மத்தியிலேயே பேசு பொருளாக மாறியது. மாயா மற்றும் பூர்ணிமா பேசிக்கொண்டிருக்கையில் விஜய்க்கு இன்னொரு வார்னிங் கொடுக்கப்படும் என்று கூறினர். 

ஸ்ட்ராங் ஆன போட்டியாளர்கள்:

பிக்பாஸ் இல்லத்தில் இந்த முறை, ஸ்மால் பாஸ் வீடு என்ற பெயரில் இன்னொரு வீட்டையும் பிரித்து வைத்துள்ளனர். அதனால், ஒரு நாள் இருப்பது போன்று இன்னொரு நாள் போட்டியாளர்கள் இருப்பதில்லை. ஆனாலும், ஆரம்பத்தில் இருந்தே மாறாமல் சில போட்டியாளர்கள் அவரவர்களின் கேமை விளையாடி வருகின்றனர். பிரதீப், ஜோவிகா, நிக்சன், மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், விசித்ரா உள்ளிட்டோர் அந்த பலமான போட்டியாளர்களின் லிஸ்டில் உள்ளனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News