முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்...கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Oct 1, 2023, 08:36 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
  • இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பங்கேற்று வருகின்றனர்.
  • எடுத்தவுடன் பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.
முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்...கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்! title=

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பித்து விட்டது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக களமிறங்க ஆரம்பித்து விட்டனர். முதல் நாளே அவர்களை அதிர வைக்கும் வகையில் பிக்பாஸ் செம டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். 

முதல் நாளே செம டாஸ்க்..! 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி இன்று ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார். அவருக்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தவுடன் கேப்டன்ஸி பேட்ஜ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் கையில் கொடுத்தவுடன் ஒரு ட்விஸ்டும் வைக்கப்பட்டது. அடுத்து வரும் போட்டியாளரிடம் 5 நிமிடத்திற்குள் விவாதம் செய்து, அந்த கேப்டன்ஸி பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த விவாதம் முடிவு பெறவில்லை என்றால் அந்த கேப்டன்ஸி தற்போது யாரிடம் இருக்கிறதோ அவரிடமே இருக்கும். இந்த போட்டி காரசாரமாக நடைப்பெற்று வருகிறது. 

முதல் நாளே முற்றிய விவாதம்..

கூல் சுரேஷை அடுத்து பூர்ணிமா ரவி உள் நுழைந்தார். அவர் கூல் சுரேஷிடம் விவாதித்து அந்த கேப்டன்ஸி பேட்ஜை வாங்கினார். இதையடுத்து, அவருக்கு அடுத்து வந்த ரவீனா இந்த பேட்ஜை விவாதித்து வாங்கினார். இவருக்கு அடுத்து வந்த நடிகர் பிரதீப் இந்த பேட்ஜை வாங்கி வைத்துக்கொண்டார். அவர் அடுத்து வந்த இரண்டு பேரிடமும் விவாதித்து தன் பேட்ஜை தக்க வைத்துக்கொண்டார். 

மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!

புது ரூல்ஸ்..புது வீடு..! 

இந்த முறை பிக்பாஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த முறை பிக்பாஸ் இல்லம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்கு தனி வீடு ஆண்களுக்கு தனி வீடு என்று கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு, வரும் போட்டியாளர்களுக்கு புதுப்புது பரிசுகளும் கொடுக்கப்படுகிறது. இது ரசிகர்கள் மற்றும் பாேட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்னும் பல ட்விஸ்டுகள் இனி வரும் எபிசோடுகளில் காத்துக்கொண்டிருக்கின்றன. 

100 நாட்கள் தாக்குப்பிடிப்பார்களா..? 

இந்த சீசன் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் ரக்கட் ஆக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளது. இரண்டாவது போட்டியாளராக வந்த பூர்ணிமா கூல் சுரேஷிடம் திறமையாக வாதம் செய்தார். இதையடுத்து வந்த ரவீனா ரவியிடம் இவர் விவாதத்தில் தோற்றார். இதையடுத்து, வந்த நடிகர் பிரதீப் இரண்டு பேரிடம் வாக்குவாதம் செய்து தன் பேட்ஜை தக்க வைத்துக்கொண்டார். அதனால், இவர் 100 நாட்கள் வரை இந்த இல்லத்தில் தாக்குப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் வெற்றியாளருக்கு கிடைக்க போகும் பரிசு என்ன? 

பிக்பாஸ் போட்டியில் 7 வது சீசன் போட்டியில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசாக வழங்கப்படும். 

மேலும் படிக்க | சைகையிலேயே கலக்கிய கமல்... வந்தது பிக்பாஸ் சீசன் 7 வீடியோ - இதோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News