Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது

100 நாட்கள் வரை நடக்கும் பிக்பாஸ் ஐந்தாம் சீசனில் பிக் பாஸாக பட்டம் வெல்வார்கள்? மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த நாள் இன்று....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2021, 01:03 AM IST
  • பிக்பாஸ் 5ம் சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள்
  • பிக்பாஸ் வீட்டிற்குள் 18 பேரும் அடியெடுத்து வைத்த நாள் இன்று
  • 100 நாட்களில் தாக்குப்பிடிக்கப் போவது யார்?
Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது title=

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளாராக அறிமுகமானார் இசைவாணி. அதையடுத்து இரண்டாவது போட்டியாளாராக ராஜு ஜெயமோகன், மதுமிதா மூன்றாவதாக அறிமுகமானார். அபிஷேக் ராஜா நான்காவது போட்டியாளராகவும், ஐந்தாவது போட்டியாளராக அறிமுகமானார்  திருநங்கை நமீதா மாரிமுத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் ஆறாவது போட்டியாளாராக அறிமுகமானார் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு பிரபல தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் பிரபலமான பிரியங்காதேஷ்பாண்டே. 

Who is the hero என்ற கமலஹாசனின் பாடலை பாடி பிரியங்கா நிகழ்ச்சியில் அறிமுகமானார் பிரியங்கா தேஷ்பாண்டே. இந்த திரைப்படப் பாடலை ஆண்டிரியா நன்றாக பாடியிருப்பார், அவரைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று கமலஹாசன் குறிப்பிட்டார்.

Read Also | பிக்பாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 

பிக்பாஸ் போட்டியில் கமலுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியையாவது தொகுத்து வழங்கவேண்டும் என்று ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை தெரிவித்தார் இந்த அசல் தொகுப்பாளினி.

நிகழ்ச்சியின் ஏழாவது போட்டியாளராக அறிமுகமானார் டேபிள் டென்னிஸ் பிளேயரான அபிநய். பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரியின் பேரன் கணிதமேத ராமானுஜர் திரைப்படத்தில் நடித்துள்ளார் அபிநய். விவசாயத்தில் விருப்பம் கொண்ட இவர் விவசாயமும் செய்துவருகிறார்.

நடிகர் அபிநயை அடுத்து எட்டாவது போட்டியாளராக அறிமுகமானார் பிரபல சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. சின்னத்தம்பியில் நந்தினியாக நடித்து புகழ்பெற்றவர் பல தொலைகாட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

தனது முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட வலியை அவர் பகிர்ந்துக் கொண்டார். தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதையும், கணவரின் குடும்பம் தனக்கு இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் தனது சொந்த வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்டார் பவானி.

Also Read | பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட… 

அடுத்ததாக ஒன்பதாவது போட்டியாளராக அறிமுகமானார் நாட்டுப்புற பாடல் நாயகி சின்னப்பொண்ணு. நக்குமுக்கா என்ற பாடலுடன் அதிரடியான பாடலைப் பாடி நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் சின்னப்பொண்ணு. இவர் நாட்டுப்புற பாடல் பாடகியாக புகழ்பெற்றவர். தானாகவே பாடல்களை புனைவதிலும் வித்தகி என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் கலைஞர்கள் சுணங்கியிருக்கிறார்கள், அவர்களை ஊக்கப்படுத்த, பிக்பாஸில் கலந்துக் கொள்வதாக சின்னப்பொண்ணு தெரிவித்தார். உலகத்தின் நாயகனே என்று கமலஹாசனைப் பற்றிய ஒரு புதிய பாடலை புனைந்து பாடினார் நாட்டுப்புற பாடகி.

தனது குடும்பமே கலைக்குடும்பம் என்று குறிப்பிட்ட சின்னப்பொண்ணு, நாட்டுப்புற கலைஞர் என்பதில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

Also Read | பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்; சர்ச்சை பதில்

நிகழ்ச்சியின் பத்தாவது போட்டியாளராக அறிமுகமனார் நாடியா. மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நாடியா சாங் (Nadia Chang). மலேசியாவை சேர்ந்த நாடியா, மாடலாக பணிபுரிந்தவர். தனது வாழ்க்கையின் உயிர்நாடி கணவர் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என்று பெருமையுடன் சொன்னார் நாடியா.

தனது வாழ்க்கையை மாற்றியது டிக்டாக் செயலி என்றும், அதன் மூலம் மிகவும் பிரபலமான நாடியா பிரபலமான பாடலுக்கு நடனமாடி நிகழ்ச்சியில் அறிமுகமானார்.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் பதினோராவது போட்டியாளராக அறிமுகமானார் வருண். திரைப்படங்களில் நடிப்பதற்காக ஃபைட்டராக பத்தாண்டுகளாக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார் வருண். அதோடு, நடிப்பு பயிற்சி, நடனப் பயிற்சி என பன்முகத் திறமை கொண்டவர் வருண்.

சில படங்களிலும் நடித்திருக்கும் வருண், தனக்கு ஒரு அடையாளம் கிடைப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வருண். பிக்பாஸ் வீட்டில் நடிப்புக்கான பயிற்சி கிடைக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலஹாசன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

Also Read | பிக் பாஸ் 5 

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் பணிரெண்டாவது போட்டியாளராக அறிமுகமானார் இமான். இமான் அண்ணாச்சி என்று தொலைகாட்சிகளில் பிரபலமான இவர் கமல்ஹாசனை நிகழ்ச்சிக்கு வரவேற்க விரும்புவதாக இமான் சொல்ல, அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. ஆங்கருக்கே ஆங்கர் என்று கமலஹாசன் அவரை கலாய்த்தார்.

சின்னத்திரையில் குட்டிக் குழந்தைகளை சமாளித்த தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சமாளித்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் இமான் அண்ணாச்சி. 

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 13வது போட்டியாளராக அறிமுகமானார் மாடல் அழகி ஸ்ருதி ஜெயதேவன். பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 14வது போட்டியாளராக அறிமுகமானார் அக்ஷரா ரெட்டி. 2019ஆம் ஆண்டில் சூப்பர் மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Read | பிரம்மாண்ட செட்; அசத்தலான பிக்பாஸ் சீசன் 5 ஹவுஸ் போட்டோஸ்

திரைப்படங்களில் நடித்துவரும் அக்ஷரா ரெட்டி, பாக்ஸிங் தெரிந்தவர். நாய்கள் தனது நண்பர்கள் என்று சொல்லும் அக்ஷரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகும் பாக்சிங் அழகி. தேசிய நிலையிலும், சர்வதேச நிலையிலும் அழகிப் போட்டிகளில் மகுடம் சூடியவர் அக்ஷரா ரெட்டி.

மாடல் என்றால் என்ன என்று கேள்வி கேட்டு தெளிவுப்படுத்தினார் கமலஹாசன். ஸ்ருதி ஜெயதேவனும் அக்ஷராவும் இணைந்து ரேம்ப் வாக் செய்து நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். 

15வது போட்டியாளராக அறிமுகமானார் ராப் பாடகி ஐக்கி பெரி. அதிரடி ராப் பாடலைப் பாடி அறிமுகமானார் ஐக்கி பெரி.

ALSO READ | பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்த மூன்று முக்கிய பிரபலங்கள்

நாடக கலைஞர் தாமரைச் செல்வி பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 16வது போட்டியாளராக அறிமுகமானார். கொரோனாவினால் கலைகால் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக கமலஹாசன் தெரிவித்தார். தனது மருதநாயகம் திரைப்படம் எடுப்பதற்கான உத்வேகம் அளித்தது கிராமப்புறக் கலை தான் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 17வது போட்டியாளராக அறிமுகமானார் நடிகர் சிபி. நிரூப் நந்தகுமார் பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 18வது போட்டியாளராக அறிமுகமானார். தனது உயரமே நல்ல வாய்ப்புகள் கிடைக்க தடையாக இருந்தது என்று சொல்கிறார் நடிப்பில் ஆர்வம் உள்ள நிரூப்.

நிகழ்ச்சியின் முதல் நாளில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். 100 நாட்கள் வரை நடக்கும் இந்தப் போட்டியில் எலிமேஷன் சுற்றில் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள். யார் ஐந்தாம் சீசனில் பிக் பாஸாக பட்டம் வெல்வார்கள் என்பதை தொடர்ந்து பார்த்து வரபோட்டியாளர்கள் 100 நாட்களில் தெரிந்துவிடும். 

Also Read | பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News