Bigboss: நிரூப்பை ஜெயிலுக்கு அனுப்பிய பிரியங்கா - அலறும் பிக்பாஸ் ஹவுஸ்

பிக்பாஸ் வீட்டில் நிரூப்பை நெருங்கிய நண்பனாக காட்டிக் கொண்ட பிரியங்கா, இப்போது அவரையே ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2021, 09:19 PM IST
Bigboss: நிரூப்பை ஜெயிலுக்கு அனுப்பிய பிரியங்கா - அலறும் பிக்பாஸ் ஹவுஸ் title=

ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்க்குக்குப் பிறகு பிக்பாஸ் (BIGBOSS) வீடு போர்க்களமாக மாறியுள்ளது. இதுநாள் வரை நெருங்கிய நண்பர்களாக இருந்த பிரியங்காவும், நிரூப்பும் தாறுமாக சண்டைபோடத் தொடங்கியுள்ளனர். ரெட் டிவி டாஸ்க்கின்போது பிரியங்கா, நிரூப் இருவரும் ஒரே டீமில் இருந்தாலும், அபிஷேக்குடன் சேர்ந்து பிரியங்கா செய்த சில ப்ளான்களில் நிரூப்புக்கு உடன்பாடு இல்லை. 

ALSO READ | இனி மஹத் பற்றி எதுவும் என்னிடம் கேட்காதீங்க; மஹத் முன்னாள் காதலி...!

இந்நிலையில், தற்போது டாஸ்க் முடிந்து மிக மோசமாக விளையாடிய இருவரை தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் அறிவுறுத்துகிறார். அதில், பிரியங்காவும், அபிஷேக்கும் தங்களின் நெருங்கிய நண்பன் என சொல்லிக் கொண்ட நிரூப்பை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், கோபத்தின் உச்சத்துக்கே செல்லும் நிரூப், பிரியங்காவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பதிலுக்கு களத்தில் குதித்த பிரியங்கா, ‘ உன் வாயில என்ன பீடிங் பாட்டிலா வச்சிருந்த’ என ஏகபோக வசனத்தில் கடுமையாக வசைபாடுகிறார்.

ALSO READ| ’நான் உங்க கிட்ட Permission கேட்கல’ சிபியை ஆஃப் செய்த ரம்யா கிருஷ்ணன்

இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாக காட்சியளிக்கிறது. முடிவாக, ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்க்கில் மிக மோசமாக விளையாடியதாக பாவனியும், நிரூப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பாதாள சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கிடையே, நிரூப்பின் கேரக்டர் என்ன? என்பது குறித்து தனக்கே உரிய பாணியில் பிரியங்காவிடம் கொளுத்தி போடுகிறார் அபிஷேக். அவரின் வார்த்தைகளை தட்டாமல் கேட்கும் பிரியங்கா, நிரூப் மீது இன்னும் வெறுப்படைகிறார். 61வது நாளில் வெளியிடப்பட்டுள்ள மூன்று ப்ரோமோவும் ‘தெறி’ ரகமாக இருக்கிறது. இவ்வளவு நாட்களில் வெளியான புரோமோக்களிலேயே, ரசிகர்களை அதிகம் ஈர்த்த புரோமோக்களாக இவை மாறியிருப்பதால், எபிசோடு இன்னும் ஃபயர்ராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News