கே.ஜி.எப் 2 படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது ஜீ நிறுவனம்

இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் கேஜிஎப் 2 (KGF 2)  படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது ஜீ நிறுவனம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 01:25 PM IST
  • விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழில் இப்படத்தை வெளியிட்டது.
  • தற்போது கேஜிஎப் 2 (KGF 2) படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது

  • கேஜிஎப் 2(KGF 2) படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜீ (ZEE )நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கே.ஜி.எப் 2 படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது ஜீ நிறுவனம்  title=

இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் கேஜிஎப் 2 (KGF 2)  படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது ஜீ நிறுவனம்.

2018 ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது கேஜிஎப்.  அந்த சமயத்தில் தமிழில் மட்டும் நான்கு படங்கள் வெளியானது.  அதனுடன் சேர்ந்து கேஜிஎப் படமும் தமிழில் டப் செய்து வெளியானது.  விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழில் இப்படத்தை வெளியிட்டது. முதல் இரண்டு மூன்று நாட்கள் சரியாக ஓடாமல் இருந்த கேஜிஎஃப் திரைப்படம் அதன்பின் வசூலை அள்ளியது.  தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியான பின் கேஜிஎஃப் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்திற்கு பிறகு கன்னட நடிகர் யாஷிற்க்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

தற்போது கேஜிஎப் 2 (KGF 2) படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.  கடந்த ஜூன் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.  கேஜிஎப் 2 (KGF 2)  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.  கேஜிஎப் 2 (KGF 2) படத்தை அதன் முதல் பாகம் வெளியான டிசம்பர் மாதத்திலேயே வெளியிடாமல் என்று அப்படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.  அதே மாதத்தில் தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும் வெளியாக உள்ளது.  

KGF2

இந்நிலையில் கேஜிஎப் 2(KGF 2)  படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜீ (ZEE )நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளுக்கான உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது ஜீ (ZEE )நிறுவனம்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ புஷ்பா vs கே.ஜி.எப் 2? ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News