தமிழ்நாட்டில் இனி ஒரு திரையரங்க டிக்கெட் விலை ரூ. 250? தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2024, 01:28 PM IST
  • தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு.
  • விக்கெட் விலையில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை.
  • மேலும் பல கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இனி ஒரு திரையரங்க டிக்கெட் விலை ரூ. 250? தயாரிப்பாளர் சங்கம் முடிவு! title=

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு

நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 

மேலும் படிக்க | வேள் பாரி காட்சிகள் திருட்டு... கங்குவாவா... தேவாராவா... எந்த படத்தை சொல்கிறார் இயக்குநர் ஷங்கர்?

அரசாங்க கவனத்திற்கு 

திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், A/C திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், NON A/C திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

Operator License க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை.ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. MALL ளில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity க்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity க்கு  அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் MSME இன் கீழ் வருவதால் MSME விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | விஸ்வரூபம் எடுக்கும் லட்டு சர்ச்சை... சிறப்பு விசாரணை குழு அமைப்பு - சந்திரபாபு நாயுடு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News