மனைவி விவாகரத்தா? பிக்பாஸ் பிரபல அளித்த விளக்கம்

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய அபிந்ய்யிடம், ஒருவர் 'உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா?’ எனக் கேட்டுள்ளனர், இதற்கு பதில் அபிநய் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2022, 12:28 PM IST
மனைவி விவாகரத்தா? பிக்பாஸ் பிரபல அளித்த விளக்கம் title=

ஜெமினி கணேசன் - சாவித்ரி அவர்களின் பேரன் அபிநய். இவர் கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறான ராமானுஜன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் இவர் விவசாயத்தில் அதிக ஆர்வத்தை செலுத்தினார்.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அபிநய் கலந்துக் கொண்டார். அந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி.அபிநய். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் உள்ளே இருந்த போது அபிநய்யிடம், ராஜூ நேரடியாக பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இந்த சம்பவம் குறித்து பெரும் சர்ச்சைகள் வெடித்தது. 

மேலும் படிக்க | Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!

இதற்கிடையே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அபிநய். மேலும் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய், இந்த நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்தது என்பதும் 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்தது தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய அபிந்ய்யிடம், ஒருவர் 'உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா?’ எனக் கேட்டுள்ளனர், இதற்கு பதில் அளித்த அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் முதலில் அதிர்ச்சியானேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறு. இதில் உண்மை இல்லை. மேலும் தான் மனைவியும் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இதுபோன்ற ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அபிநய் விவாகரத்து என்பது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News