மாமனிதன் படத்தை பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா

மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சீனுராமசாமி தனது மகன் என பாரதிராஜா நெகிழ்ந்துள்ளார்

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 26, 2022, 02:18 PM IST
  • மாமனிதன் திரைப்படம் 24ஆம் தேதி வெளியானது
  • படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன
மாமனிதன் படத்தை பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா title=

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாமனிதன். இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைத்திருக்கும் இப்படத்தை யுவன் தயாரித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’... மன்சூர் அலிகானின் ரகளை நடனம் - வீடியோ

ஆர்.கே. சுரேஷ் படத்தை வெளியிட்டார். சில நாள்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

Bharathiraja

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு சீனுராமசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சீனுராமசாமி தனது மகன் எனவும் நெகிழ்ந்துள்ளார்.

 

முன்னதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்தது .. சீனு ராமசாமியின் கிளாசிக் படமாக வந்துள்ளது.

மேலும் படிக்க | 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் - அனிருத்! வெளியானது தாய்க்கிழவி பாடல்!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம் . இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் உணர்வுப்பூர்வமான இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது” என பாராட்டியிருந்தார்.

 

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விக்ரம் படம் லோகேஷுடையதுதான் ஆனா ஐடியா இந்த இயக்குநரோடது...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News